சளி மற்றும் இருமலைப் போக்கும் அற்புத இலை..!!

Read Time:3 Minute, 52 Second

சளி-மற்றும்-இருமலைப்-போக்கும்-அற்புத-இலைசளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டால் எந்த வேலையையும் கவனமாகச் செய்ய இயலாது. பெரும்பாலானோருக்கும் அடிக்கடி இந்தத் தொல்லை ஏற்படும். சீரற்ற உணவு முறை, சுற்றுச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சளித் தொல்லையைப் போக்க ஒரே இலை மட்டும் போதும். அது என்ன இலை, அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்குப் பார்ப்போமா.?

கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி மிகச் சிறந்த மருத்துவக் குணம் கொண்ட செடி. இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் நிறைந்த இதன் இலை பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வைப் பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றைச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கச் சீதள இருமல் தீரும். இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காய்ச்சல் போகும். இதன் இலைகளை எடுத்துக் கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவக் குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும். தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாகத் தடவ குணம் தரும்.

மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனவுகளுடன் விமானத்தில் சென்ற பயணிகள்… வெடித்துச் சிதறிய பரிதாபம்..!! அதிர்ச்சி வீடியோ
Next post நீ என்ன அசிங்கமான கேம் விளையாண்டன்னு எல்லோர்கிட்டையும் சொல்லப்போறேன் தனுஷ்! ட்வீட் செய்த சுசி!