நடிகை பாவனாவை கடத்த ரூ.30 லட்சம் பேரம்: சிக்கும் 6 சினிமா பிரபலங்கள்..!!

Read Time:6 Minute, 8 Second

201702201308387164_Rs30-Lakhs-transfer-6-Leading-cinema-persons-in-the-field_SECVPFதமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.

இவர் கடந்த 17-ந்தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பினார். அத்தானி என்ற இடம் அருகே வந்தபோது இவரது கார் மீது இன்னொரு கார் மோதியது. இதனால் நடிகை பாவனா சென்ற காரை, டிரைவர் நிறுத்தினார்.

அப்போது இன்னொரு காரில் வந்த 5 பேர் கும்பல் பாவனா காருக்குள் நுழைந் தனர். அவர்கள் ஓடும் காருக் குள் 2 மணி நேரம் பாவனா வுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அதனை செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டனர்.

அதன்பிறகு கொச்சி அருகே காரை நிறுத்தி அந்த கும்பல் கீழே இறங்கிக் கொண்டனர். பின்னால் வந்த இன்னொரு காரில் ஏறி அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த சம்பவம் பற்றி நடிகை பாவனா, டைரக்டரும், நடிகருமான லாலிடம் தெரிவித்தார். அவர் போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுக்கு தகவல் கொடுத்தார்.

அவரது உத்தரவின் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் நடிகர் லால் வீட்டுக்கு விரைந்துச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த நடிகை பாவனாவிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

மேலும் பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் பாவனா கடத்தப்பட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில் என்ற பல்சர் சுனில் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சுனில் சினிமா பிரபலங்களுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பவர். இவர் மீது கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. எனவே அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவரது செல்போன் நம்பர் மூலம் அவர் இருக்கும் இடத்தை அடையாளம் காணும் பணியும் நடந்தது.

அப்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்குச் சென்ற கேரள போலீசார் இருவரையும் கைது செய்து கேரளா அழைத்து வந்தனர். அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் நடிகை பாவனாவை கடத்தினால் தங்களுக்கு ரூ.30 லட்சம் பணம் தருவதாக பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் சுனில் தெரிவித்தார். இதனால் இச்சம்வத்தில் ஈடுபட்டோம்.

ஆனால் சுனில் கூறியபடி பணம் தரவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் நாங்கள் வழக்கில் இருந்து தப்பிக்க நாங்களும் தலை மறைவானோம் என்ற னர்.

இதையடுத்து குற்றவாளிக ளின் செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் சம்பவம் நடந்த நாளில் சுனிலின் செல்போனுக்கு 60-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மலை யாள திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தயாரிப் பாளர்கள், நடிகர்கள் 6 பேரின் எண்களும் இருந்தன.

இவர்கள் எதற்காக சம்பவ நாளில் குற்றவாளிகளை தொடர்பு கொண்டு பேசினர். பாவனாவை பழிவாங்கும் நோக்கில் அவரை கடத்தச் சொன்னார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே நடிகை பாவனாவுக்கு நேர்ந்த கொடுமை பற்றிய தகவல் வெளியானதும் மலையாள திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்தது. அரசியல் கட்சிகளும், அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் உத்தரவின் பேரில் போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏ.டி.ஜி.பி. சந்தியாவை நியமித்தார். இவர் கேரள சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திறமையாக துப்பு துலக்கி உண்மை குற்றவாளிகளை கைது செய்தவர் ஆவார்.

ஏ.டி.ஜி.பி. சந்தியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டதும் அவர், டி.ஜி.பி. லோக்நாத் பெகராவுடன் சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

மேலும் சம்பவம் நடந்த அத்தானி முதல் கொச்சி நகர எல்லை வரையிலான சாலைகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்தனர்.

இந்த விசாரணையில் வழக்கு பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரணம் தெரியாத காய்ச்சல்..!!
Next post 40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்யலாமா..!!