இரவில் படுக்கும் முன் இந்த ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் வேகமாக வெள்ளையாகலாம்..!!
இன்றைய காலத்தில் சருமத்தின் அழகைத் தக்க வைக்க போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட பொருட்களைக் கொண்டு பராமரிப்பதை விட, வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரிப்பது தான் நல்லது.
ஏனெனில் வீட்டில் தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகளில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமான அளவில் இருக்கும். இதனால் சரும செல்கள் புத்துயிர் பெறுவதுடன், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சருமத்தின் நிறமும் மேம்படும். இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை இரவில் படுக்கும் முன் போட்டால், வேகமாக சருமம் வெள்ளையாகும்.
நெல்லிக்காய் மற்றும் கடலை மாவு பேக் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
முந்திரிப்பழம் மற்றும் காபி பேக் சிறிது முந்திரிப்பழங்கள் மற்றும் காபி பொடியை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் மட்டுமின்றி, மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.
எலுமிச்சை மற்றும் தேன் பேக் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் இது சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்து, முகப்பொலிவை மேம்படுத்தும்.
வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் பேக் வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கேரட் மற்றும் கொய்யா பேக் சிறிது கேரட் மற்றும் கொய்யாப் பழத்தை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்க காய்ந்த பின், நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கால் சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 4 முறை போட்டு வந்தால், அழகிய சருமத்தைப் பெறலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating