செக்ஸ் வைத்துக்கொள்ள ஒருவர் என்னை கட்டாயப்படுத்தினால்..!!

Read Time:3 Minute, 45 Second

35-450x273செக்ஸ் வெச்சுக்கிட்டா என்ன தப்பு?” “இன்னைக்கு எல்லாரும்தானே செக்ஸ் வெச்சுகுறாங்க…” என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

உண்மை இதுதான்: எல்லா இளைஞர்களும் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை.

இன்று, நிறைய இளைஞர்கள் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். பள்ளிப்படிப்பை முடிப்பதற்குள், 3 இளைஞர்களில் 2 பேர் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்று அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அதே ஆராய்ச்சியில் இன்னொரு உண்மையும் மறைந்து இருக்கிறது. 3 இளைஞர்களில் ஒருவர் அப்படி செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை என்றும் தெரிகிறது.

சரி, அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்ளும் இளைஞர்கள் எப்படி உணருகிறார்கள்? அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு அதிக பாதிப்புகள் இருக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சில பாதிப்புகளை இப்போது பார்க்கலாம்.

வேதனை. கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் இளைஞர்கள், பிறகு அதை நினைத்து வேதனையால் வாடுகிறார்கள்.

ஒரு அழகான வரைபடம் கால் மிதியாக பயன்படுத்தப்படுகிறது
கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது, ஒரு அழகான வரைபடத்தை கால் மிதியாக பயன்படுத்துவதுபோல் இருக்கிறது
சந்தேகம். “இந்த நபர் என்னோட மட்டும்தான் செக்ஸ் வெச்சுகுறாரா இல்ல நிறைய பேரோட இப்படி பழகுறாரா?” என்ற சந்தேகம் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ரெண்டு பேருக்குமே வருகிறது.

ஏமாற்றம். பொதுவாக, தங்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் ஆண்களையே பெண்கள் நேசிப்பார்கள். காகிதம் போல் கசக்கி போடும் ஆண்களை அல்ல. ஆண்களை பொருத்தவரை, தங்களுடைய ஆசைக்கு சட்டென இணங்கிவிடும் பெண்களிடம் ஆண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு போகப் போக குறைந்து விடுகிறது.

என்ன முடிவுக்கு வரலாம்: உங்கள் உடல் மதிப்புள்ளது, செக்ஸ் தொல்லைக்கு இணங்கி அதன் மதிப்பை இழந்துவிடாதீர்கள். செக்ஸ் தொல்லைகளை எதிர்த்து நிற்கும் சக்தி உங்களுக்கு இருக்கிறது என்பதை காட்டுங்கள். கல்யாணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்வது தவறு என்ற கடவுளுடைய சட்டங்களுக்கு உங்களால் கீழ்ப்படிய முடியும் என்பதை நிரூபியுங்கள். ஒரு நாள் நீங்களும் கல்யாணம் செய்துகொள்ளலாம், உங்கள் துணையோடு எந்த குற்றவுணர்வோ கவலையோ பயமோ இல்லாமல் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். அப்போது உங்கள் வாழ்க்கை தேனாய் தித்திக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீராங்­க­னையின் ஆடை கழன்­றதால் ரத்துச் செய்­யப்­பட்ட WWE ரெஸ்லிங் போட்டி..!! (வீடியோ)
Next post சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவை..!!