ஒரே வாரத்துல கலர் ஆகணுமா உங்க கிச்சன்ல இதெல்லாம் இருந்தாலே போதும்..!!

Read Time:4 Minute, 18 Second

ஒரே-வாரத்துல-கலர்-ஆகணுமா-உங்க-கிச்சன்ல-இதெல்லாம்-இருந்தாலே-போதுமுகம் சிவப்பாக, பளபளவென இருப்பது தான் அழகு என்ற நினைப்பு நம் எல்லோருடைய மனதுக்குள்ளும் ஆணித்தரமாகப் பதிந்துவிட்டது.

முகத்தை சிகப்பழகாக மாற்றும் கிரீம்கள் மார்க்கெட்டில் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை எல்லா சருமத்துக்கும் ஒத்துப்போவதில்லை. அலர்ஜியை உண்டாக்கிவிகின்றன.
ஆனால் நம்முடைய வீட்டில் உள்ள பொருட்கள் சிலவற்றைப் பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் இல்லாத, பளபள சருமத்தை மிக விரைவாகப் பெற்றுவிட முடியும்.

எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் சிறந்த பலனைக் காண முடியும். எலுமிச்சை ஜீரண சக்தியை அதிகரிக்கும். பற்களை வலிமையாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயங்களை மட்டுமல்லாது, சருமத்தைப் பொலிவானதாக்கவும் பல ஆயிரம் ஆண்டுகளாக எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எலுமிச்சை சாறினை அப்படியே பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்.
மாசு மற்றும் முகப்பரு உள்ள சருமத்தில் எலும்ச்சையை அப்படியே பயன்படுத்தினால் எரிச்சலை உண்டாக்கும் என்பதால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, காட்டனில் நனைத்து முகத்துக்குப் பயன்படுத்தலாம். முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் வரை உலரவிட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு 2 முதல் 3 முறை இப்படி செய்தாலே போதும். மிக விரைவில் உங்கள் சருமத்தில் உண்டாகும் மாற்றத்தைக் காண முடியும்.

தக்காளி
முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், வெப்ப சலனத்தால் உண்டான தீக்காயம் ஆகியவற்றை இருந்த இடமே தெரியாமல் போக்கிவிடும் தன்மை கொண்டது தக்காளி. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பிக்கும்.
ஒரு தக்காளி, 2 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், சிறிதளவு கடலைமாவு ஆகியவற்றைச் சேர்த்து பேஸ்ட்டாக்கி, முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைந்து பொலிவு உண்டாகும். இந்த பேக்கை தினமும் பயன்படுத்தலாம்.

பால் மற்றும் எலுமிச்சை
பால் மிகச்சிறந்த கிளன்சராகப் பயன்படுவதோடு முகத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். தினமும் குளிக்கச் செல்லும் முன் வெதுவெதுப்பன நீரை உங்கள் குளிக்கும் பாத் டப்பில் நிரப்புங்கள். அதில் 2 எலுமிச்சையின் சாறினைச் சேர்த்து, அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து குளிக்கப் பயன்படுத்தலாம்.

ஸ்கிரப்
முகம் மற்றும் சருமத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்து சருமத்தில் உள்ள இறந்த செல்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியுமு். நம்முடைய வீட்டின் சமையலறையில் உள்ள மிக அத்தியாவசியமான இரண்டு பொருட்கள் பாலும் சர்க்கரையும் தான். இரண்டையும் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொண்டு, சிறிது நீர் அல்லது பால் சேர்த்து முகத்தில் நன்கு தேய்க்க, முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் பொலிஸை கூட்டாக கற்பழித்த 5 பொலிஸ் அதிகாரிகள்..!!
Next post உடலுறவில் உண்டாகும் உச்சம் இரவு முழுக்க தொடரணுமா? இதோ வழி..!!