பெண்களின் பாலியல் நாட்டம் குறைதல்..!!

Read Time:16 Minute, 45 Second

news_30-07-2014_43aw-450x237பாலியல் நாட்டம் என்பது, பாலியல் செய்கைகளில் ஈடுபடுவதற்கு ஒருவருக்குள்ள உற்சாகம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது.எவ்வளவு கால இடைவெளியில் ஒருவருக்கு பாலியல் செய்கையில் ஈடுபடும் ஆசை தோன்றுகிறது என்பதும், அந்த ஆசை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதுமே பாலியல் நாட்டத்தை அளவிடக்கூடிய அளவுகோலாகும்.

பெண் பாலூட்டிகள், பாலியல் கிளர்ச்சி உச்சமடையும்போது அல்லது ஈஸ்ட்ரஸ் காலகட்டத்தின்போது மட்டுமே கலவியில் ஆர்வம் காட்டும். ஈஸ்ட்ரஸ் என்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரந்து இரத்தில் கலக்கும் காலகட்டத்தைக் குறிக்கிறது. ஆகவே, கீழ் நிலை பாலூட்டிகளில், பாலியல் நாட்டமானது ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுவதாகும். ஆனால் ஆண் பாலூட்டிகளோ, பெரும்பாலும் எப்போதுமே கலவிக்குத் தயாராகவே இருக்கும். ஆண் இனங்களின் பாலியல் நாட்டமானது கருவுறத் தயாராக இருக்கும் பெண் துணையின் நடத்தை மற்றும் மணத்தால் தூண்டப்படுகிறது.

மனிதர்களில், பாலுறவு என்பது மற்ற உயிரியல் தேவைகளிலிருந்து வேறுபட்டதாகும், ஏனெனில் தனிப்பட்ட முறையில் உயிர்பிழைத்திருக்க பாலுறவு அத்தியாவசியமானதல்ல. ஆனால் இனத்தை விருத்தி செய்யவும் குழுவாகப் பிழைத்திருப்பதற்கும் அது அவசியம். மனிதர்களில் பெண்களின் பாலியல் நாட்டமானது, முற்றிலும் பாலியல் ஹார்மோன்களால் மட்டுமே தூண்டப்படுவதாக இல்லை.

பெண்களின் பாலியல் நாட்டத்தில் உயிரியல், உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த காரணிகளும் பங்குவகிக்கின்றன.

உயிரியல் காரணிகள்: ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் (பெண் உடலிலிலும் சிறிய அளவில் சுரக்கும் ஹார்மோன்கள்) ஆகியவை பாலியல் நாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த காரணிகள்: உடல் பற்றிய அபிப்ராயம், நெருக்கம், அந்தரங்கம், மதம்/பண்பாடு சார்ந்த நம்பிக்கைகள், முந்தைய பாலியல் அனுபவங்கள், உறவில் உள்ள சிக்கல்கள் மற்றும் பிற பல்வேறு உளவியல் காரணிகள் பாலியல் நாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம்.
பெண்களின் பாலியல் நாட்டம் குறைதல்

ஒரு பெண்ணின் பாலியல் ஆசையானது, வாழ்நாளில் மாறிக்கொண்டே இருக்கும். வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளின் போது, ஒரு உறவு தொடங்கும்போது அல்லது முடியும்போது, கர்ப்பகாலத்தின்போது, மாதவிடாய் நிற்கும்போது மற்றும் நோயுற்று இருக்கும்போது என பல்வேறு காலகட்டங்களில் பெண்களின் பாலியல் ஆசை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம்.

உங்கள் துணைக்கு இருக்குமளவுக்கு அடிக்கடி பாலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். அல்லது முன்பை விட உங்கள் பாலியல் ஆசை குறைந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம். எனினும், உங்கள் வாழ்க்கையில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்தில் இயல்பான ஒன்றாகவே இருக்கலாம், அது உங்களுக்கோ உங்கள் துணைக்கோ எவ்வித மன வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் உங்கள் உறவு நல்லபடியாகவே தொடரலாம்.

இயல்பான பாலியல் ஆசை என்பதற்கு துல்லியமான வரையறை எதுவும் இல்லை. சிலர் தினமும் பாலுறவு கொள்ள வேண்டும் என்று விரும்பலாம், இன்னும் சிலருக்கு அடிக்கடி இல்லாமல் எப்போதாவது பாலுறவில் ஈடுபடுவதே மகிழ்ச்சியாக இருக்கலாம். எனினும், ஒரு பெண் தனக்கு மன இறுக்கம் ஏற்படும் வகையில், குறிப்பிட்ட காலத்திற்கு பாலியல் ஆசை இல்லாமல் அல்லது குறைவாக இருந்தால், அவருக்கு வழக்கத்திற்கு மாறான பாலியல் நாட்டக் குறைபாடு பிரச்சனை (ஹைப்போஆக்டிவ் செக்ஷுவல் டிசையர் டிசார்டர்)இருக்கலாம் (இப்போது இதனை பெண்களின் பாலியல் ஆர்வம்/கிளர்ச்சிக் கோளாறுஎன்று குறிப்பிடுகிறோம்)

பெண்களின் குறைவான பாலியல் நாட்டத்தின் அறிகுறிகள் என்னென்ன?

பெண்களின் குறைவான பாலியல் நாட்டத்திற்கான சில அறிகுறிகள்:

பாலியல் தொடர்பான கற்பனை அல்லது எண்ணங்கள் இல்லாமல் போவது அல்லது மிக அரிதாக ஏற்படுவது.
சுய இன்பம் உட்பட எந்த பாலியல் செயல்பாட்டிலும் ஆர்வம் இல்லாமல் போவது.
பாலியல் தொடர்பான கற்பனை மற்றும் செய்கைகள் இல்லாமல் போனது குறித்து மன வருத்தமடைதல் அல்லது கவலைப்படுதல்.
பெண்களின் பாலியல் நாட்டம் குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?

உடல் நலமின்மை, உறவில் பிரச்சனைகள், உணர்வு ரீதியான பிரச்சனைகள், பண்பாடு சார்ந்த நம்பிக்கைகள், வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் பெண்களின் பாலியல் நாட்டத்தைப் பாதிக்கலாம்.

பெண்களின் குறைவான பாலியல் நாட்டத்திற்கான பொதுவான காரணங்களாக அறியப்படுபவை:

உடல் ரீதியான காரணிகள்

பாலியல் உறுப்பில் பிரச்சனைகள்: உடலுறவின்போது வலி ஏற்படுத்துகின்ற அல்லது சேதத்தை உண்டாக்குகின்ற பிரச்சனைகள் ஏதேனும் உங்கள் இனப்பெருக்க உறுப்புகளில் இருந்தால், நீங்கள் பாலுறவை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் போகலாம், உங்கள் பாலியல் நாட்டமும் குறையலாம்.

மருத்துவரீதியான உடல்நலமின்மை: நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நரம்பியல் நோய்கள் மற்றும் பிற நாட்பட்ட கோளாறுகள் போன்ற மருத்துவரீதியான பல நோய்களும் பாலியல் நாட்டத்தைக் குறைக்கலாம்.

மருந்துகள்: சில மருந்துகள் பெண்களின் பாலியல் நாட்டத்தைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளன.உதாரணமாக மன அழுத்தம், கால்கை வலிப்பு நோய் ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட சில மருந்துகள் பாலியல் நாட்டத்தைக் குறைக்கலாம்.

பழக்கங்கள்: புகைப்பழக்கத்தாலும் அதிகப்படியான ஆல்கஹால் எடுத்துக்கொள்வதாலும் பாலியல் நாட்டம் குறையலாம்.

உடல் அபிப்ராயம் சார்ந்த சிக்கல்கள்: வடிவக் குறைபாடு அல்லது அறுவை சிகிச்சையால், மார்பகங்கள் அல்லது பாலியல் உறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம், இதனால் உடல் பற்றிய அபிப்ராயம் பாதிக்கப்பட்டு, பாலியல் நாட்டம் குறையலாம்.

களைப்பு: அதிகப்படியான வேலை அல்லது செயல்பாட்டினால் சோர்வு ஏற்படலாம், இதனால் பாலியல் நாட்டம் குறையலாம்.

ஹார்மோன் சார்ந்த காரணிகள்

கர்ப்பம் மற்றும் தாய்ப்பாலூட்டுதல்: கர்ப்ப காலத்திலும் தாய்ப்பாலூட்டும் காலகட்டத்திலும் ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு மற்றும் நேரமின்மை ஆகிய காரணங்களால் பாலியல் நாட்டம் குறையலாம்.
மாதவிடாய் நிறுத்தம்: மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு திடீரென்று குறையும், இதனாலும் பாலியல் விருப்பம் குறையலாம்.பிறப்புறுப்பு வறண்டு போகலாம், பாலுறவின் போது சிரமம் இருக்கலாம் இதனாலும் பெண்களின் பாலியல் ஆர்வம் குறையலாம்.
உளவியல் சார்ந்த காரணிகள்

பாலுறவை பாவம் அல்லது குற்றம் என்று சித்தரிக்கும் மதம் அல்லது பண்பாட்டு நம்பிக்கைகள்.
வேலை அல்லது பணம் சார்ந்த பிரச்சனைகளால் மன அழுத்தம் அதிகரித்தல்.
சுய மதிப்பு குறைதல்.
கடந்த காலத்தில் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள்.
கடந்த காலத்தில் பாலியல்ரீதியான மோசமான அனுபவங்கள்.
உறவில் சிக்கல்கள்

பாலியல் துணையுடன் உணர்வுரீதியான அந்நியோன்யம் இல்லாமல் போவதாலும் பெண்கள் பலருக்கு பாலியல் நாட்டம் குறையலாம். உறவு சார்ந்த சிக்கல்களும் பாலியல் நாட்டம் குறைய வழிவகுக்கலாம். பாலியல் நாட்டத்தைக் குறைக்கும் சில காரணிகள்:

பாலியல் துணையுடன் உணர்வுரீதியான நெருக்கம் இல்லாமை
சண்டை அல்லது சமரசமாகாமல் தொடரும் கருத்து வேறுபாடுகள்
பாலியல் துணையைச் சந்தேகப்படுதல், நம்பிக்கை இழத்தல் போன்ற சிக்கல்கள்
நம்பிக்கை துரோகம்
பாலியல் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி வெளிப்படையாக ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்ளாமல் விடுதல்
எப்போது ஒரு பெண் பாலியல் நாட்டம் குறைவாக உள்ளது என்ற காரணத்திற்காக மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

பாலியல் நாட்டம் குறைவது உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

கடந்த காலத்தில் பாலியல் ஆசை மற்றும் செயல்பாடு குறைவாக இருந்ததன் காரணமாக மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருந்திருந்தால், உங்கள் மருத்துவர் அவற்றின் அடிப்படையில் உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான பாலியல் நாட்டக் குறைபாடு பிரச்சனை உள்ளதா எனக் கண்டறியும் ஆய்வுகளைச் செய்யலாம்.

இனப்பெருக்கப் பாதையில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என அறிய இடுப்புப் பகுதியில் பரிசோதனைகள் செய்யப்படலாம், பாலியல் ஹார்மோன்கள், தைராய்டு, நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால் போன்றவை பற்றி அறிய இரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படலாம்.

உளவியல் மற்றும் உறவு சார்ந்த சிக்கல்கள் பற்றி மேலும் ஆய்வு செய்வதற்காக, உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறும்படி உங்களுக்குப் பரிந்துரைக்கப்படலாம்.

பெண்களின் குறைந்த பாலியல் நாட்டப் பிரச்சனைக்கு எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது?

உங்கள் மருத்துவ நிலை பற்றி ஆய்வு செய்து அறிந்த பிறகு, உங்கள் மருத்துவர் பொதுவான சில அறிவுரைகளை வழங்கலாம். அத்துடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சைகளையும் வழங்கலாம்.

பொதுவான அறிவுரைகள்

உங்கள் பாலியல் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கவும்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம், ஒவ்வொரு வாரத்திலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை உங்கள் பாலியல் துணையுடன் நெருக்கமாக இருக்க ஒதுக்குங்கள்.
பாலுறவு கொள்ளும் இடம், உடல் அமைப்புநிலை (பொசிஷன்) ஆகியவற்றை மாற்றுதல், புதிய முறைகளை முயற்சித்துப் பார்த்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் உடலுறவை சுவாரசியமானதாக மாற்றுங்கள்.
வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் மன அழுத்தத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்கவும்.
உங்கள் பாலுறவு விருப்பத்தைப் பாதிக்கக்கூடிய புகைப்பழக்கம், அதீத மதுப்பழக்கம் போன்றவற்றைக் கைவிடவும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.
தற்போதைய மருந்துகளில் மாற்றம்

பாலியல் ஆசையைக் குறைக்கக்கூடிய ஏதேனும் மருந்துகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்களா என்று பார்ப்பதற்காக, மருத்துவர் நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றி ஆய்வுசெய்வார். அப்படி ஏதேனும் இருந்தால் அத்தகைய பக்க விளைவுகள் இல்லாத புதிய சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

ஆலோசனை

உளவியல் சிக்கல்களும் உறவு சார்ந்த பிரச்சனைகளும் பாலியல் நாட்டம் குறைவதற்குக் காரணமாக இருக்கலாம் என்பதால், அவற்றைச் சரி செய்துகொள்வதற்காக அனுபவமிக்க உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். உங்கள் துணைவருடனே நீங்கள் இந்த ஆலோசனை பெறலாம், உங்கள் உறவில் எழும் சிக்கல்களை எப்படிக் கையாள்வது, நெருக்கத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றிய அறிவுரைகளை உளவியல் நிபுணர் வழங்குவார்.

ஹார்மோன் சிகிச்சை

ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை (மாத்திரை, தோல் பட்டை, ஸ்ப்ரே அல்லது ஜெல்லாக வழங்கப்படுகிறது) பெண்மை குறைபாடு ஒரு மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உள்ள பெண்களுக்கும் பாலியல் நாட்டத்தை அதிகரிக்கும்.

ஃப்ளிபான்செரின்

ஃப்ளிபான்செரின் என்பது மாதவிடாய் நிற்பதற்கு முன்பு, வழக்கத்திற்கு மாறான பாலியல் நாட்டக் குறைபாடு பிரச்சனை உள்ள பெண்களுக்குப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும்.இது பாலியல் நாட்டத்தை ஓரளவு அதிகரிக்கலாம், ஆனால் கிரிகிருப்பு, மயக்கம், குமட்டல், தூக்கமாகவே இருப்பதுபோன்ற உணர்வு போன்ற மோசமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்த சாத்தியமுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லைக் கடித்து, ஜெயலலிதவை ஓங்கி அடித்த சசி…. தாதாவான சசிகலா..!! (வீடியோ)
Next post பேருந்து சாரதி மீது இடம்பெற்ற கொடூரத் தாக்குதல்..!! (அதிர்ச்சி வீடியோ)