பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது..!!

Read Time:5 Minute, 39 Second

201702140928059071_problem-of-dandruff_SECVPFஉலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப் பற்றியும் தலையில் இருக்கும் பொடுகு பற்றியும் கவலைப்படுகின்றான். இது தலையின் இறந்த செல்கள். இவை நம் தோளில் துணியில் செதில் செதிலாக உதிர்ந்து விழும். இது பலருக்கு தீராத பிரச்சினையாக இருக்கின்றது. இது ஏன் ஏற்படுகின்றது?

* உடல் முழுவதும் வறண்ட சருமம் சிலருக்கு இருக்கலாம். உங்கள் தலையும் சருமம்தான்.

* உணவு ஒரு முக்கிய காரணம். ஸிங்க், மக்னீசியம், வைட்டமின்கள், ஓமேகா 3. இவை ஒருவருக்கு அவசியம் தேவை. இதில் குறைபாடு ஏற்படும் பொழுது பொடுகு தாக்குதல் ஏற்படுகின்றது.

* நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுதும், நரம்பு சம்பந்தமாக தாக்குதலின் பொழுதும் பொடுகு தாக்குதல் ஏற்படும்.

* அன்றாடம் முறையாக தலை சீவுதல் அவசியம்.

* தலை எண்ணெய் ஊற்று போல் சிலருக்கு இருக்கும். இதன் காரணமாக தலையில் பூஞ்ஞை பாதிப்பு ஏற்பட்டு பொடுகு பாதிப்பு ஏற்படலாம்.

* சின்ன அலர்ஜி தலையில் ஏற்பட்டாலும் பொடுகு ஏற்பட காரணம் ஆகின்றது. சிலருக்கு ஷாம்பூ கூட அலர்ஜியாக இருக்கலாம்.

* உடலில் ஏற்படும் அலர்ஜி எக்ஸிமா, சோரியாஸிஸ் போன்ற காரணங்களால் தலையில் பொடுகு ஏற்படலாம்.

* அதிக மன அழுத்தம், மனஉளைச்சல் பொடுகினை ஏற்படுத்தும். இது மிக சர்வ சாதாரணமாக காணப்படும். பாதிப்பு என்றாலும் முழு தீர்வு பெறுவது சில சமயம் சவாலாகி விடுகின்றது. ‘ஆப்பிள் சிடார் வினிகர்’ என்று கடைகளில் கிடைக்கும். 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகருடன் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் கலந்து தலையில் தடவி 60 நிமிடங்கள் சென்று அலசி விடுங்கள். வாரம் இருமுறை இதனை செய்யுங்கள்.

* பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவினை சிறிதளவு எடுத்து தண்ணீர் கலந்து தலையில் தடவி 15 நிமிடங்கள் சென்று அலசி விடவும்.

* 3-5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயினை தடவி ஒரு மணி நேரம் சென்று நன்கு அலசி விடவும். இது பூஞ்ஞை கிருமிகளை நன்கு நீக்கும்.

* கடல் உப்பு சிறந்த தாது உப்புகள் நிறைந்தது. இதனை சிறிது எடுத்து சிறிதளவு நீரில் கலந்து தலைமுடியின் வேர்காலில் படும் படி நன்கு தடவி சிறிது நேரம் சென்று அலச பொடுகு, கிருமி, பூஞ்ஞை நீங்கும். முடி நன்கு வளரும். வாரம் இரு முறை இவ்வாறு செய்யலாம்.

* ஆஸ்ப்ரின் மாத்திரைகள் இரண்டினை நன்கு பொடி செய்து நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூ சிறிது எடுத்து கலந்து கொள்ளுங்கள், நீங்கள் குறிக்கும் பொழுது ஈரத்தலையில் ஆஸ்பிரின் கலந்த ஷாம்பூவினை நன்கு முடிகளின் வேர் கால்களில் செல்ல, மென்மையாய் தேய்த்து 2 நிமிடம் ஊற விட்டு பின்பு அலசி விடுங்கள். ஆஸ்ப்ரினில் உள்ள ‘சாலி சிலேட்’ பொடுகினை நீக்கும்.

* ஈரமான தலையில் தயிரினைத் தடவி 15 நிமிடம் சென்று பிசுபிசுப்பு போக நன்கு அலசி விடுங்கள். பாக்டீரியா பொடுகினை நீக்கும். ஆனால் புது தயிரினை மட்டுமே பயன்படுத்துங்கள். இது போல தயிரும், எலுமிச்சை சாறும் கலந்து தடவலாம்.

* பேக்கிங் சோடா எனப்படும் ஆப்ப சோடா வினை தண்ணீரில் கலந்து ஈரத் தலையில் தடவி 10-15 நிமிடங்கள் சென்று தலையினை நன்கு அலசி விடவும். கவனம்; அதிக நேரம் தலையில் பேக்கிங் சோடா இருந்தால் தலைமுடி வறண்டு விடும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.

* ஆப்பிள் சிடார் வினிகர் இன்னமும் இங்கு பிரசித்தி அடையவில்லை. ஆனால் இதன் நன்மைகள் ஏராளம். இந்த ஆப்பிள் சிடார் வினிகர் 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழைக்கு என்றும் மருத்துவ உலகில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை நன்கு தலையில் தடவி குளிப்பது பல நன்மைகளை பயப்பதாக இயற்கை வைத்தியமுறைகள் கூறுகின்றன.

* துளசி இலையினை நன்கு அரைத்து தலையில் தடவி குளிப்பதும் மேற்கூறிய நன்மைகளை அளிக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெட்டவெளியில் உறவு கொள்ள மஜாவான இடங்கள் எவை..!!
Next post காண்டம் பூஜை, நடிகை திஷாவை வணங்கினால் கன்னி கழியுமாம்: இவங்களை ஏன் சுனாமி தூக்கல..!!