கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்வேன்: சாக்ஷி அகர்வால்..!!

Read Time:3 Minute, 15 Second

201702141337356534_Will-attract-viewers-by-acting-in-romance-says-Shakshi_SECVPF‘யூகன்’, ‘திருட்டு விசிடி’, ‘ஆத்யன்’, ‘கககாபோ’ படங்களில் நடித்திருப்பவர் சாக்ஷி அகர்வால். தற்போது ஜீவாவுடன் ‘ஜெயிக்கிறகுதிரை’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று நடிப்பு பயிற்சி பெற்று திரும்பி இருக்கிறார். இது பற்றி கூறிய சாக்ஷி அகர்வால்….

“என் குடும்பத்தினர் தொழில் அதிபர்கள்.நான் எம்.பி.ஏ. பட்டதாரி ஆனால் நான் சினிமா தான் என்னுடைய வாழ்க்கை என்று தீர்மானித்து விட்டேன். எனவே இதில் முழு தகுதி உடையவளாக மாற விரும்பினேன். இதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் பிரபலமான லீஸ்ட்டாஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். இங்கு பயிற்சி பெற்ற பலர் முன்னணி நடிகை ஆகி இருக்கிறார்கள். ஆஸ்கர் விருது பெற்று இருக்கிறார்கள். இங்கு 4 மாத காலம் கடுமையான நடிப்பு பயிற்சி பெற்றேன். இதன் மூலம் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். பல தொழில் நுட்பங்களை கற்றிருக்கிறேன்.

இங்கு பயிற்சி பெற்ற முதல் தென் இந்திய நடிகை நான் தான் என்பதில் பெருமைப்படுகிறேன். இங்கு ஸ்ரீ தேவி மகள் ஜானவி, ரன்பீர் கபூர், இம்ரான்கான் மற்றும் சர்வதேச நடிகர் – நடிகைகள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இங்கு நடிப்பு கற்றது வித்தியாசமான அனுபவம். பூட்டிபேர் என்ற நடன பயிற்சி, பிலாட்டீஸ், கிக்பாக்சிங் ஆகியவற்றையும் கற்றிருக்கிறேன்.

எல்லா விதமான பாத்திரங்களிலும் நடிப்பதுஎளிது. கவர்ச்சியாக நடிப்பது தான் கடினம். ரசிகர்களை கவர்ச்சியால் கவர்வது அதைவிட கடினம். கவர்ச்சியை கலையில் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறேன். கவர்ச்சியாக நடிக்க அங்க அமைப்பு, உடல் அசைவு, கேமரா கோணம், டைரக்டரின் கற்பனை என்று பல வி‌ஷயங்கள் இருக்கின்றன.

சரியான புரிதலுடன் கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடிக்கும் நடிகையின் கவர்ச்சி தான் திரையில் எடுபடும். எனக்கு ஏற்ற அதிக கவர்ச்சி எது என்பதை நிர்ணயித்து நடிப்பேன். அதன்மூலம் ரசிகர்களை கவர்வேன். நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு ஆக்‌ஷன், காமெடி, முழு நாயகி என்று எந்த வகையான படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முறையான தூக்கமின்மை நோயினைத் தரும்..!!
Next post வெட்டவெளியில் உறவு கொள்ள மஜாவான இடங்கள் எவை..!!