முகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி உபயோகப்படுத்துவது என தெரியுமா..!!

Read Time:2 Minute, 22 Second

downloadமுகப்பருக்கள் அதிக எண்ணெய் சருமத்தில் சுரப்பதாலும் கிருமிகளின் தொற்றாலும் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு மரபணு காரணமாகவும் தீவிர முகப்பருக்கள் குறிப்பிட்ட வயது வரை வரும். பிறகு மறைந்துவிடும். ஆனால் தழும்புகள் அப்படியே இருக்கும். முகப்பருக்கள் மறைந்தாலும் அதன் தழும்பு முகத்தின் அழகை கெடுப்பது போல் அமையும். அதன் நீங்காத வடுக்களை எப்படி அகற்றுவது என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

எலுமிச்சை சாறு எப்படி வேலை செய்யும்? எலுமிச்சை சாறிலுள்ள அமில சக்தி பாதிப்படைந்த செல்களை முழுவதும் அகற்றும். இதனால் புதிய செல்கள் அங்கு உருவாகும் போது தழும்புகள் மறைந்துவிடும். புதிய சருமம் கிடைக்கும். அதனை பயன்படுத்தும் விடஹ்த்தை காண்போம்.

எலுமிச்சை சாறு மற்றும் யோகார்ட் : எலுமிச்சை சாறை 1 ஸ்பூன் அளவு யோகார்ர்டுடன் கலக்குங்கள். அந்த கலவையை ஒரு பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். தினமும் அதனை செய்யுங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரி சாறு : எலுமிச்சை சாறு , வெள்ளரி சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சம அளவு எடுத்து இந்த கலவையை முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தைகழுவ வேண்டும். தினமும் செய்யலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளைக் கரு : முட்டையின் வெள்ளைக் கருவுடன் 2 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். இது கொலாஜன் உற்பத்தியை பெருக்கும். சருமம் மென்மையாக மாறும். தழும்புகள் விரைவில் மறையத் தொடங்கும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறந்து செயல்பட மாதுளை தரும் அற்புத நன்மைகள்..!!
Next post ஜெயலலிதாவுக்கு விடுதலை : சொத்துக்குவிப்பு வழக்கின் திருப்பங்கள்..!!