வெங்காய தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?..!!

Read Time:2 Minute, 22 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

அதுமட்டுமின்றி சாம் சமைக்கும் உணவுகளில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்

ஈரப்பதம் – 86.6%

புரதம் – 1.2%

கொழுப்புச்சத்து – 0.1%

நார்ச்சத்து – 0.6%

தாதுச்சத்து – 0.4%

மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7%

மருத்துவ பயன்கள்

வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீரை நன்கு வெளியாகும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.

வெங்காய தண்ணீர்

தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.

வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும், இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் காதல் வாழ்க்கையில் இந்த கெமிஸ்ட்ரி இருக்கா?..!!
Next post வீட்டு பணிப்பெண்ணை கற்பழித்த நபர்! கணவரை மயக்கியது பணிப்பெண் என மனைவி புகார்..!!