வார இறுதியில் பொலிவிழந்த முகத்தைப் பிரகாசமாக்க வேண்டுமா இதோ சில வழிகள்..!!

Read Time:2 Minute, 44 Second

வார-இறுதியில்-பொலிவிழந்த-முகத்தைப்-பிரகாசமாக்க-வேண்டுமா-இதோ-சில-வழிகள்வாரம் முழுவதும் ஓயாமல் உழைத்து, முகம் பொலிவிழந்து உள்ளதா? வேலைப்பளுவால் வார நாட்களில் உங்கள் அழகைப் பராமரிக்க நேரம் கிடைக்காமல், முக அழகு பாழாகி உள்ளதா? கவலையை விடுங்கள். வார இறுதியில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போட்டால் போதும், முகம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருக்கும்.

இங்கு வார இறுதியில் முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றில் ஏதேனும் ஒன்றை முகத்திற்கு பயன்படுத்தி, முகப் பொலிவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

கேரட்-தேன் மாஸ்க்
கேரட்டை அரைத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு-தயிர் மாஸ்க்
1 ஸ்பூன் மசித்த உருளைக்கிழங்குடன், 1/2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

ஓட்ஸ்-பால் மாஸ்க்
ஓட்ஸ் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீர் பயன்படுத்தி ஸ்கரப் செய்து கழுவுங்கள்.

மஞ்சள்-கடலை மாவு மாஸ்க்
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பால் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

பப்பாளி-தேன் மாஸ்க்
பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழம்-பாதாம் எண்ணெய் மாஸ்க்
வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். இதனால் முகப் பொலிவு மேம்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகள் இரவில் என்னவெல்லாம் செய்வார்கள்..!! அதிர்ச்சி வீடியோ
Next post ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காததால் சசிகலாவின் அதிரடி நடவடிக்கை என்ன?..!!