ஓபிஎஸ் vs சசிகலா: முதல்வர் சீட் யாருக்கு …. பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்?

Read Time:3 Minute, 47 Second

ops-sasi-122104-600-09-1486608078முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். அந்த 117 எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. என்னதான் அதிமுக எம்எல்ஏக்களை பாதுகாப்பாக சிறை வைத்தாலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று தில்லாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

அதிமுகவிற்கு மொத்தம் 136 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பேரவைத் தலைவரை கழித்து விட்டால் மொத்தம் 134 உறுப்பினர்கள்தான். திமுக 89, காங்கிரஸ் 8,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 1,நியமன உறுப்பினர் 1,என சட்டசபையில் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இப்போது வரை 5 எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 எம்எல்ஏக்கள் வரை ஓபிஎஸ் பக்கம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் தற்போது சசிகலா தங்களது கஸ்டடியில் 130 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளது. இவர்கள் அனைவருமேஎ சசிகலாவை ஆதரிப்பார்களா? என்பது உறுதி இல்லை.

எத்தனை பேர் பேர் சசிகலாவிற்கு 117 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே முதல்வராக தொடருவேன் என்று கூறியுள்ளார். ஒருவேளை 20 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கொடுத்தால் கூட சசிகலாவிற்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 114ஆக குறைந்து விடும்.

அதே நேரத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரின் ஆதரவு கடிதத்தையும் வாங்கி வைத்துள்ளாராம் சசிகலா. ஓபிஎஸ்க்கு ஆதரவு தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு படையெடுப்பதால் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒரு எம்பியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். மேலும் பலர் அடுத்தடுத்த நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகசியமாக பலர் ஆதரவு தெரிவித்துள்ளனராம். ஆளுநர் வருகை இன்று தமிழகம் வரும் ஆளுநர் முன்பாக தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை நிறுத்தி ஆட்சியமைக்க உரிமை கோருவார் சசிகலா. எனவே அனைவரின் கண்களும் ராஜ்பவனை நோக்கியே உள்ளன. சசிகலா பெரும்பான்மையை நிருபிப்பாரா? அல்லது 1988ல் சட்டசபையில் நடந்தது போல அதிமுக வரலாறு மீண்டும் திரும்புமா? பார்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகான சருமத்துக்கு அரோமா ஆயில்..!!
Next post நான் 2 புள்ளைகளுக்கு அம்மா, என்னை விட்டுடுங்க: இயக்குனரிடம் கூறிய பிரபல நடிகை..!!