பழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கும் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!

Read Time:2 Minute, 13 Second

fwewபழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது-

ஏதேனும் பழ வகைகளை இனி சாப்பிடும் முன் அதனுள் புழு அல்லது பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஸ்மார்ட்போன் கொண்டு நேரடியாகப் பார்க்க முடியும்.

ஃபிரான்ஹோஃபர் ஃபேக்ட்ரி ஆப்பரேஷன் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் (HawkSpex mobile) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர்.

இந்த செயலி பொருட்களை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து அதனுள் இருப்பதைக் கண்டறிய வழி செய்கிறது.

உதாரணமாக, அப்பிள் ஒன்றை ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் ஹாக்ஸ்பெக்ஸ் செயலியை ஸ்மார்ட்போனில் ஓபன் செய்து பழத்தை ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்டதும் அப்பிள் பழத்தில் இருக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் அதன் உறுப்புக்கள் ஸ்மார்ட்போன் திரையில் தெரியும்.

சந்தையில் ஏற்கனவே பல்வேறு ஸ்கேனிங் சாதனங்கள் இருந்தாலும் இவை ஸ்மார்ட்போனில் கூடுதலாக பிரிசம் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இந்த செயலி இருந்தாலே போதுமானது, இத்துடன் ஸ்மார்ட்போன் கேமரா மட்டும் கொண்டு ஸ்கேன் செய்யலாம்.

இந்த செயலியைக் கொண்டு உணவு வகைகளின் தரம் மற்றும் விவசாயம் சார்ந்த பயன்பாடுகளைப் பெற முடியும்.

இந்த செயலி வணிகப் பயன்பாட்டிற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் நினைவு இல்லமாக மாற்றப்படும்: பன்னீர்செல்வம்..!!
Next post சென்னைக்கு தாயுடன் வந்து கதை கேட்கும் ரித்திகாசிங்..!!