கண்களில் உண்டாகும் சதைப்பையை தடுக்கும் ஈஸியான வழிகள்..!!

Read Time:5 Minute, 5 Second

கண்களில்-உண்டாகும்-சதைப்பையை-தடுக்கும்-ஈஸியான-வழிகள்நீங்கள் கடுமையாக உழைக்க முற்படும் ஒரு அழகிய காலை வேளையில் கண் வீக்கம் மிக பெரிய சங்கடத்தை ஏற்படுத்தும்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டுமுறை தீர்வுகள் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். கண் வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான அழுகை , அதிகமான வேலை பளு ,கண் அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாடுகளினால் இந்த வீக்கம் ஏற்படுகிறது.

மேலும் தூக்கமின்மை, ஒவ்வாமை மற்றும் மது அருந்தியபின் ஏற்படும் உடலியல் மாற்றங்களும் இந்த கண் வீக்கத்தின் காரணிகளாக விளங்குகின்றன. கண் சோர்வாக இருந்தால் புத்துணர்ச்சி காணாமல் போய்விடும்.எனவே இந்த வீட்டுமுறை தீர்வுகள் மூலம் கண் வீக்கத்தை போக்கலாம்.

1 . தேநீர் பைகள் : இரண்டு உபயோகப்படுத்திய தேநீர் பைகளை 30-50 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும். குளிர்ந்த நிலையில் உள்ள அந்த தேநீர் பைகளை கண்களின் மேல் வைத்து சற்று பொறுமையாக இருக்க வேண்டும். 15-30 நிமிடங்கள் கழித்து அதனை எடுத்து விட வேண்டும். கண் வீக்கத்தை போக்க இதனை நாள் ஒன்றுக்கு இருமுறை செய்ய வேண்டும்.

2 .உருளை கிழங்கு : உருளைக்கிழங்கில் உள்ள எதிர்ப்புசக்தியுடன் கூடிய மருத்துவ குணம் கண் வீக்கத்தை எளிதாக குறைக்கும். மிதமான உருளைக்கிழங்கை எடுத்து சிறிதாக வெட்டி ஒரு துணியில் வைத்து வடிக்க வேண்டும். அதன் சாறு கண்ணில் படுமாறு அமர்ந்து கொள்ள வேண்டும்.15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

3. வெள்ளரிக்காய் குளிர்ச்சியான வெள்ளரிக்காய் துண்டுகள் மூலம் கண் வீக்கத்திற்கு நல்ல தீர்வு உண்டு.அதில் உள்ள என்சைம்கள் மற்றும் உடலின் வீக்கத்தை கட்டுப்படுத்தும் மருத்துவ தன்மை உங்களுக்கு பேருதவியாக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் 10 நிமிடம் வைத்து பின்னர் அதனை உங்கள் கண்களில் ஒற்றி கொள்ள வேண்டும்.இதனை பல முறை வேண்டுமானாலும் செய்து பயன் பெறலாம்.

4. பால் : நீங்கள் கடுமையான கண் வீக்கத்தால் அவதிப்பட்டால் பால் அதற்கான சிறந்த தீர்வாகும்.காட்டன் துணியில் குளிர்ச்சியான பாலை எடுத்து கண்களில் ஒற்றி கொள்ள வேண்டும்.10 -20 நிமிடம் அவ்வாறு இருந்த பின் மீண்டும் பலமுறை இதனை செய்து பலன் பெறலாம்.

5.முட்டையின் வெள்ளை கரு: தோலினை மிருதுவாக்கும் மருத்துவ குணம் முட்டையின் வெள்ளை கருவில் இருப்பதினால் கண் வீக்கம் மற்றும் கண்களின் அருகில் ஏற்படும் சுருக்கங்களை இதன் மூலம் தவிர்க்கலாம். முதலில் முட்டையில் உள்ள வெள்ளை கருவை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் மற்றும் உலர் இலை சாறு சேர்த்து பதப்படுத்த வேண்டும். காட்டன் துணி அல்லது ப்ரஷ் மூலம் அதனை எடுத்து கண்களில் ஒற்றி கொள்ள வேண்டும்.சிறுது நேரும் கழித்து தண்ணீரில் கழுவி விட வேண்டும்.

6.குளிர்விக்கப்பட்ட தண்ணீர் மற்றும் கரண்டி : ஒரு கரண்டியை குளிர்ந்த தண்ணீரில் முக்கி பின்னர் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும்.அந்த சமயத்தில் மற்றொரு கரண்டியை குளிர்வித்தல் நலம். சிறிது நேரம் கழித்து இந்த கரண்டியை கண்களுக்கு உபயோகிக்கலாம். நீங்கள் கரண்டிகளை தண்ணீரில் வைக்கும் போது அது போதிய அளவு குளிர்ச்சியாக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் முதல் திருநங்கை பொம்மை நாளை முதல் விற்பனை..!!
Next post சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் எதிரொலி்: பல இடங்களில் சாலை மறியல்- கல்வீச்சு..!!