சிவப்பழகு பெற வீட்டில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!

Read Time:4 Minute, 8 Second

சிவப்பழகு-பெற-வீட்டில்-நீங்கள்-செய்ய-வேண்டியது-என்னநம் வழக்கமான சரும பராமரிப்பு க்லென்சிங், டோனிங், சீரம் மற்றும் அதன்பிறகு ஒரு மாயிஸ்சரைசர் ஆகியவற்றை உள்ளடக்கியது. நீங்கள் எதைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது மட்டுமல்ல எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தும் வேறுபடும். சரியான முறையில் பயன்படுத்தினால் இது உங்கள் ஈரப்பதத்தை தக்கவைப்பதுமட்டுமின்றி,சருமத்தின் வயதினை கட்டுப்படுத்தி மிக முக்கியமாக வறண்டும் பொலிவிழந்தும் இருப்பதை தவிர்க்கும்.

ஒரே மாயிஸ்சரைசர் அனைத்து பருவகாலத்திற்கும் பொருந்தாது என்பதால் உங்கள் சருமத்தின் தேவைக்கேற்ப அதை நீங்கள் மாற்றவேண்டும். உதாரணமாக குளிர்காலத்தில் க்ரீம் அடிப்படையிலான ஒரு கெட்டியான லோஷனையும் கோடைகாலத்தில் சற்று இலேசான ஒரு லோஷனையும் பயன்படுத்தவேண்டும்.

செய்முறை : உங்கள் சருமத்தின் தன்மையினை அறிந்து அதற்கு பொருந்தும் ஒரு மாயிஸ்சரைசரை எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை : முகத்தை நன்கு கழுவுவது உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு மற்றும் மாசுக்களை அகற்றி ஒரு நல்ல சருமப் பராமரிப்பின் துவக்கமாக அமையும். அதனால் முகத்தை கழுவுங்கள்.

செய்முறை : உங்கள் சருமத்தை தட்டித் தேய்த்துக் கொடுங்கள். தீவிரமாக தேய்க்க வேண்டாம். உங்கள் முகத்தில் சருமத்தை இழுப்பது நீட்சியடையச் செய்வது எல்லாம் நீங்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் வயதை அதிகரித்துக் காட்டும். உங்கள் சருமம் சற்றே ஈரமாக இருக்க விடுங்கள். இது மாயிஸ்சரைசரை நன்கு பயன்படுத்த உதவும்.

செய்முறை : பொலிவாக்குதல் (டோனிங்): அனைத்துவிதமான சருமங்களுக்கும் ஏற்ற ஒரு இயற்கை தீர்வு இதோ. சில துளிகள் ரோஸ்வாட்டரை எடுத்து அதை பஞ்சில் நனைத்து உங்கள் சருமத்தின் மீது அழுத்தவும். சருமம் அதை தானாகவே உறிஞ்சிக்கொள்ளவிடுங்கள்.

செய்முறை : தேவையான அளவு மாயிஸ்சரைசர் உங்கள் உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு அதை உங்கள் முகவாயில், மூக்கில், நெற்றியில் மற்றும் கன்னத்தில் சிறு புள்ளிகளாக வைக்கவும்.

செய்முறை :உங்கள் இரு கைகளின் விரல்களாலும் நன்கு பரப்பி தடவவும். உங்கள் முன் தலையில் தொடங்கி வெளிப்புறமாகவும் மேல் நோக்கியும் தேய்க்கவும். இதே போல் கன்னம் மற்றும் மூக்கில் செய்யவும்.

செய்முறை : க்ரீமை முகத்தில் சுழற்சிவாக்கில் தடவி பரப்பவும். அதிக அழுத்தம் தராமல் அல்லது தேய்க்காமல் இதை செய்யவேண்டியது அவசியம். ஏனெனில் அது உங்கள் சரும அடுக்குகளை சிதைத்து வரிகளை ஏற்படுத்தும்.

செய்முறை : உங்கள் கழுத்துப் பகுதியில் மாயிஸ்சரைசர் போட மறக்காதீர்கள். ஏனெனில் இந்த பகுதியும் முகத்தைப் போல வயதான தோற்றத்தை தரக்கூடியது. இந்த எளிய செய்முறைகளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் மென்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 100 பேருடன் உறவுகொண்ட அழகி கர்ப்பம்: ஐவரில் ஒருவரே தந்தை..!!
Next post பெண்ணை பாலியல் வல்­லு­ற­வுக்­கு­ட்­ப­டுத்­திய பின்னர் நாய் மூலமும் துஷ்­பி­ர­யோகம் செய்த கொடூரம்..!!