தட்டில் ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலையின் அருமையான பயன்கள்!..!!

Read Time:2 Minute, 0 Second

karu-2உணவை மணக்க வைப்பது மாத்திரமல்லாமல் பல்வேறு மருத்துவக் குணங்களையும் கொண்டது கருவேப்பிலை. ஆனால், உணவருந்தும் போதும் தட்டில் ஒதுக்கி வைக்கப்படுவது கறிவேப்பிலையாகத்தான் இருக்கின்றது.
கறிவேப்பிலையின் மகத்துவம் தெரிந்துகொண்டால் இனிமேல் அதனை தூக்கித் தூரப்போடமாட்டீர்கள்.
கறிவேப்பிலை உணவுக்குக்கு நல்ல ருசியை வழங்குவதுடன், செரிமானத்தையும் ஏற்படுத்துகின்றது. கறிவேப்பிலையை ஜீரண உறுப்பின் நண்பன் என குறிப்பிடுகின்றார்கள்.

தலைமுடி வளர்ச்சி உள்ளிட்ட அநேக மருத்துவ பயன்கள் இந்த இலைக்குள் மறைந்து கிடக்கிறது.
பித்தத்தை தணித்து உடல் சூட்டை அகற்றும், குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்றுளைவு, நாட்பட்ட காய்ச்சலை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குடல் கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றுள்ள இந்த இலைக்கு, கண்பார்வையை தெளிவடையச் செய்யும் வல்லமையும் இருக்கிறது.

தலைமுடி நரைக்காது காத்து, நரைத்த முடிகளையும் கருமையாக்கி மயிர்க்கால்களை வலுவூட்டும் அதிசயச் சக்தி கறிவேப்பிலைக்குள் இருக்கிறது.

மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கும் கறிவேப்பிலை நலம் தரும் என நம்பப்படுகின்றது. அத்துடன், இருதய நோயைத் தடுப்பதுடன், புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறனும் இந்த இலைக்கு இருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயாவின் மரணம் இயற்கையானதல்ல – சசிகலாவை விசாரிக்க வேண்டும்..!!
Next post 100 பேருடன் உறவுகொண்ட அழகி கர்ப்பம்: ஐவரில் ஒருவரே தந்தை..!!