செய்த தவறுக்காக மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக மயானத்தில் வாழும் வயோதிபர்: குருநாகலில் சம்பவம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 45 Second

Man-who-Waiting-for-death-srilankaதனது மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக வயோதிபர் ஒருவர் கல்லறையில் வாழும் அதிசய சம்பவம் குருநாகல் கல்லேவெல, கலாவெவ பிரதான வீதியின் பெலியகந்த பகுதியில் பதிவாகியுள்ளது.

75 வயதுடைய ரணவிர ஆராச்சி தொன் டேவிட் என்ற வயோதிபரே இவ்வாறு கல்லறையில் வாழ்ந்து வருகிறார்.

குறித்த நபர் தனக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையில்,

‘நான் நாட்டின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோகராக பணியாற்றி வந்தேன். அநுராதபுரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, தனது அலுவலகத்தில் வைத்து மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் 300 ரூபாவை இலஞ்சமாக பெற்றேன். அக்காலத்தில் 300 ரூபா என்பது மிகப்பெரிய பணத் தொகையாகும். இப்போது என்றால் சாதாரண ஒரு தொகை. இலஞ்சம் வாங்கிய போது அவ்விடத்திற்கு வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டேன்.

இதனையடுத்து கைது செய்த அவர்கள், பொலிஸார் ஊடாக என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எனக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனையும் அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இரண்டு வருடம் சிறையில் இருந்தமையால் தொழிலை இழந்தேன். மீண்டும் தொழிலை கேட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்தும் எனது நியாயங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் உறவினர்களை விட்டு பிரிந்து சென்று நாட்டின் சில இடங்களில் ஆங்கில ஆசிரியராக செயற்பட்டேன். பின்னர் தான் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதற்காக மயானத்தில் 20 வருடமாக வசித்து வருகின்றேன். அயலவர்கள் வழங்கும் உணவுகளை உண்டு வாழ்ந்து வருகின்றேன்.

நாம் வாழ்க்கiயில் செய்யும் ஒவ்வொரு விடயங்களுக்கும் பின் விளைவுகள் உண்டு. இதனை ஒவ்வொரு மனிதனும் ஆழமாக சிந்தித்தால் சிறப்பான வாழ்க்கை வாழலாம் எனவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போயஸ் இல்லத்தில் வாக்குவாதம் நடந்ததால் மயங்கி விழுந்தார் ஜெயலலிதா..!!
Next post திருமணமான நடிகைகள் சினிமாவை விட்டு விலகக்கூடாது: சுருதிஹாசன்..!!