சடலங்களின் தேசம்….
வேர்க்கடலை விற்கும் வயோதிப மாது சுட்டுக்கொலை. வீதியில் ஐஸ்பழம் விற்பவர் சுட்டுக் கொலை. ஊரில் மீன் விற்பவர் சுட்டுக் கொலை. மனைவியும் சகோதரரும் நடுவீதியில் அவல ஒலம்…. ஆம். இவை இன்றைய யாழ்ப்பாணத்தின் அன்றாடக் காட்சிகள். யுத்தமுனையில் சரமாரியான எதிர்பாராத தோல்வியைத் தழுவியதின் புலிகளின் எதிர்வினை வீரம் இப்போது இந்த அப்பாவிகள் மீது காட்டப்படுகிறது. புலிகள் எத்தகைய ஈவிரக்கமில்லாத மனோவியாதிக்காரர்கள் என்பதை இந்த படுகொலைகள் மௌனமாகப் பறைசாற்றி நிற்கின்றன.
யாழப்பாண வீதிகளில் இந்த படுகொலைகளைப் புரியும் புலிகளைப் பலப்படுத்துவதற்கு வாட்டலு பல்கலைகழக மாணவர்களின் அறிவு பயன்படுத்தப்படுகிறது..
இது மட்டுமா? கந்தளாய் அகதிமுகாமில் பாலகர்கள் அவதரித்து கட்டாந்தரையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உண்ண உணவிற்கும் இருப்பிடத்திற்கும் கழிப்பிடத்திற்கும் திண்டாடுகிறார்கள். மூது}ரல் இருந்து செல்மழையின நடுவே கந்தளாய் புறப்பட்டவர்களின் துயரத்தை கல்வாரி மலைக்கு சிலுவை சுமந்த யேசுபிரான் அனுபவத்திருப்பாரோ என்னவோ.
சுகஜீவிகளான உலகத்தமிழரின் உல்லாசப் பொழுது போக்கிற்க்காக வன்னியின் வேலுப்பிள்ளை மைந்தன் நடத்தும் குரூர ஆனந்த களியாட்ட நிகழ்ச்சியிது.
வன்னியில் சிறுவர் சிறுமியர் செத்தால் இந்த பாசிச சலவை மூளைக்காரர்கள் அதனை வைத்து ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும் கொண்டாட்டம் நடத்துகிறார்கள். வண்ணமயமான பதாகைகளில் வேலுப்பிள்ளை மைந்தன் காட்சி தருகிறார். குழந்தைகள் இரத்த சிதிலங்களாக. துா! என்ன சமூகமிது??
இறைவனுக்கு பிள்ளைக்கறி சமைத்துக் கொடுத்த கதை எமது பக்தி இலக்கியங்களில் உண்டு. பிரபாகரனின் பக்தர்கள் பிள்ளை கறி சமைப்பவர்கள்… புசிப்பவர்கள. நரமாமிச பட்சணிகள.; தமிழ் ஊடகங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு நரமாமிச வேட்டையில் இறங்கியிருக்கின்றன… து}! கேடுகெட்ட பிறவிகள்!!
“இடைக்காடர் மைனர் கண்ணாடி மஸ்தான்”களும் அவர்களின் அலங்கார நாரிமணிப் பரிவாரங்களும் ஏதோ பொங்கல், தீபாவளிக் கொண்டாட்டம் போல் குளிர்கோட்டை அணிந்து புல்லரிது தினவெடுத்து திரிகின்றன. அகதிகள் பேரில் பணம் பண்ணி சுகித்திருந்த பூபாலன்களுக்கும், உசாக்களுக்கு கனடாவில் தம் உச்சாணிக் கொப்பு வாழ்வு கவிழ்ந்து விடுமோ என்று கிலேசத்தில் அலைகின்றன.
அந்தோன் செக்கோவின் குதிரை வண்டிக்காரனின் துயரத்தை விட ஆயிரம் மடங்கு துயரத்துதை கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் எமது தேசத்தில் வாழ்கிறார்கள்.
கட்டுடையில் சுட்டுக் கொல்லப்பட்ட மீன்வியாபாரியின் மனைவியும் சகோதரரும் இரத்தில் மூழ்கடிக்கப்பட்ட சடலத்தின் முன்னால் கதறியளும் நிழற்படக் காட்சி ஒன்று ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது. எமது காட்டு மிராண்டி வரலாற்றுப் பெருமையை பறைசாற்றி நிற்கிறது.
நாலு படை வைத்திருக்கிறோம், அரசாங்கம் வைத்திருக்கிறோம் என்றவர்கள்.. சண்டையில் பின்னடைவு கண்டவர்கள் ‘பேளையி;ல் இருக்கும் பாம்பென உயிர்க்கும்” பட்டினியின் பிடியில் சிக்கித் தவிக்கும் எமது சமூகம் தம்மீது கோபம் கொண்டு விடுமோ என்றஞ்சி இப்போது சகட்டுமேனிக்கு போட்டு தள்ளுகிறார்கள். தாம் தோற்றாலும் சமூகத்திற்கு பயம் இருக்கவேண்டும் பாருங்கள்.
புதிதாக அகதிகளானவர்களின் தொகை 2லட்சத்தை தாண்டி விட்டது. மானிடத்தின் துயரம் எம்வானத்தை நிரப்புகிறது. திருமலையிலிருந்து மக்கள் பேருந்துகளில் மன்னார் வந்து சேர்கிறார்கள். உயிர்பையை காவாந்து பண்ணுவதற்காக மக்கள் அங்கும் இங்கும் தறிகெட்டு ஓடிக்கொண்டும், ஓடமுடியாதவர்கள் மூலைகளில் முடங்கி கொண்டும் இருக்கிறார்கள்.
வேலுப்பிள்ளை மைந்தனின் பாசிச பிரமாண்ட மயானக்கனவு நிஜமாகிக் கொண்டிருக்கிறது. மனிதஉயிர்களின் தேசம் மனிதச்சடலங்களின் தேசமாகப் பிரதீயீடு செய்யபட்டுக் கொண்டிருக்கிறது.
ரஜீவ்காந்தியின், நீலனின் சிதிலமாக்கப்பட்ட உடல்களை இரசித்தவர்கள், ரஜனி திரணகம, சரோஜினி யோகேஸ்வரன், கேதீஸ் லோகனாதன், தங்கத்துரை, பத்மநாபா, சாம்தம்பிமுத்து, அமிர்தலிங்கம், சிறீசபாரட்ணம், வாசுதேவா போன்றவர்களின் உடல்கள் துப்பாக்கிச் சன்னங்களால் குருதி சொரிய வீழ்ந்தபோது கெக்கலி கொட்டி ரசித்தவர்கள், குண்டுகளாக மாற்றப்பட்டு சிதறடிக்கப்பட்ட சிறுமியரின் தலைவேறு உடல்வேறாகச் சிதறியபோது ஆனந்தகண்ணீர் சொரிந்தவர்கள் தற்போது இந்த கொடுமைகளை ஒரு ஆராதனையாகச் செய்து கொண்டு வருகிறார்கள்.
கலிங்கத்து பரணியில் கற்பிதம் செய்யப்பட்ட ஊழிப்பேய்களும், நீலிப்பேய்களும் பிரபாகரனின் புண்ணியத்தில் கடவாயில் இரத்தம் வழிய கோரப் பற்களுடன் எமது தேசத்தில் உலாவருகின்றன.
தமிழர்களின் சுதந்திரத்தின் பேரில் தமிழர்களை கசக்கிப் பிழிந்து ஒரு குரூர மயானத்தை நிர்மாணித்து இந்த மயானம் அழகாக இருக்கிறது என்று வண்ணங்களில் உலகிற்கு காட்டுகிறார்கள்.
சாவோலை போன்ற ஒரு யாழ்ப்பாணத்து பத்திரிகை கொஞ்ச நாட்களுக்கு முன்னால் புயல் வரும், சுனாமி வரும்,பூகம்பம் வரும் பொறுத்திருந்து பாருங்கள் என்று தனது ‘வெறுவாய்க்கில கெட்ட” ஆசிரிய தலையங்கங்களில் இடையறாது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இப்போது திடீரென்று அது சமாதானப் பிரியனாகி சாத்தான் வேதம் ஓதுகிறது. இவர்களுக்கெல்லாம் இது ஒரு வியாபாரம். சாவு வியாபாரம…
‘ கையது கொண்டு மேலதுபொத்தி” அவல வாழ்வு வாழும் அகதிகளான மக்களின் மனிதாபிமானப்பிரச்சனைகளும்- வீதியிலும், வீடுகளிலும், வளவுகளிலும் மரணித்துக் கொண்டிருப்பவர்களின் பிரச்சனைகளுமே இன்று முதன்மையானவை.
வேலுப்பிள்ளை மைந்தனுக்கும் அவனது பரிவாரங்களுக்கும் அந்தப்புர மாலை மஞ்சம் கட்டுவதல்ல. அதுபோல் தென்பகுதியில் பேய் பிடித்துதிரியும் பைசாசங்களுக்கும் வேப்பிலை அடித்தாக வேண்டும்.
இந்த தமிழ் சிங்கள பைசாசங்கள் சாதாரண மக்களின் மரணங்களில் தமக்கு ஏதும் சுவறுமா என்று அலைபாய்கின்றன. முஷ்டியை உயர்த்தும் பிக்குகள் இனவாத நெகிடி நெருப்பை மூட்டுகின்றன. துட்டகைமுனு, கஜபாகு நிலப்பிரபுத்துவ ராசாக்களின் கதைகளைச் சொல்லி இன்றைய தலைமுறையை உசுப்பவேண்டும் என்கின்றன.
வீரபௌத்த சிங்களம் பற்றி பேசுகின்றன. தமிழ் சிங்கள தீவிரவாத சத்திகள் ஒன்றுக்கொன்று அனுசரணையாகச் செயற்பட்டு இன்று நாட்டை ஒரு ஆபத்தான இன பதட்டத்தை நோக்கி ‘நீறுபூத்த நெருப்பு” நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன.
தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண முற்பட்டால் அவர்கள் நாட்டை பிரித்து விடுவார்கள் என்கின்றன. தங்களுக்கு தாங்களே வன்முறை மிருகங்களின் பெயர்களைச் சூட்டிக்கொண்டு வலம் வருகின்றன.
இலங்கையில் இன்றைய முக்கிய கேள்விகள், மனிதஉயிர்களின் பெறுமானத்தை எவ்வாறு உணர வைப்பதென்பதே. இந்த நாட்டை தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்களின் பல்லின நாடாக எவ்வாறு மாற்றி அமைப்பதென்பதே.
இந்தகேள்விகளுக்கான ஆக்கபூர்வமான நியாயபூர்வமான பதிலைக் கண்டறிவதிலேயே இந்த நாட்டின் எதிர்காலப்பாதை நரகப்பாதையா அல்;லது சுபிட்சப்பாதையா எனத் தீர்மானிக்கப்படுகிறது.
மூது}ர் பேய் நகரமாக ஆக்கப்பட்டு விட்டது. யாழ்ப்பாணம் அவ்வாறு ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் தற்போது சந்தர்ப்பவசத்தால் அடைபட்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களும் அங்குநிரந்தரமாக வாழ சபிக்கப்பட்டிருக்கும் தமிழர்களும் தாம் நரகலோகத்தில் வீழ்ந்து கொண்டிருப்பதை உணர்கிறார்கள.
பிரபாகர யமனையும் அவனது சித்திரபுத்திர பொட்டமானையும் வழிபடும் வரை தமிழர்களுக்கு இந்தப் பாதையே மீண்டும் மீண்டும் திறபடும். பிரபாகர ஊழிக்கூத்தின் வரலாற்றைப் பார்த்தால் அது புரியும்.
ஊரோடு அள்ளுபட்டுப் போகும் நிலமையும், சிறுவர்கள் கல்வியை, விளையாட்டை, கலீர் என்ற சிரிப்பொலியை அணிவதற்கு பதிலாக அவர்கள் வெடிகுண்டுகளாக மாற்றபடுவதும் உயிருடனேயே அவர்களின் சிதையில் ஏற்றப்படுவதும் வல்வெட்டித்துறை வாரிசின் புதிய அயோக்கிய வியாபாரமாகும்.
இந்த வியபாரத்தின் தரகர்களாக ரிஎன்ஏ காரர்கள் செயற்படுகிறார்கள். இது எளிய சர்வசாதாரணமான அம்மணமான உண்மை. இது எமது தமிழ் மர மண்டையில் ஏறவேண்டும். தந்தை பெரியாரின் வார்த்தையில் கூறுவதானால் இந்த வெங்காயச் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்.
தமிழர்கள் பிரபாகர வழிபாட்டிற்கு பதிலாக மனிதத்தை நேசிப்பதற்கு தம்மை தயார்படுத்த வேண்டும். மகாத்மாகாந்தியை, மாட்டின்லுதாரை, நெல்சன் மண்டெலாவை எம்சமூகத்தில் தோன்றி மறைந்த பாசிசத்தால் மறைக்கப்பட்ட அருமந்த மனிதர்களை கற்க, புரிந்து கொள்ள முயலவேண்டும். எமது சமூகத்தில் பிறந்த மண்டெலாவும், காந்தியடிகளும், அங்சாங்சுகியும் தமிழ்ப்பாசிசத்தால் அழிக்கப்பட்டு விட்டார்கள். என்ன நடக்கிறது என்று தெரியாமல் இந்த சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களில் ஒருபகுதியினர் கடவுளாகக் கருதும் பிரபாகரன் தமிழர்களை துவம்சம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதால் -அலட்சியமும் ஏளனமும் நிறைந்த பொழுது போக்காக கொண்டிருப்பதால் வேறு இனவாதசத்திகளும் அந்த மாபாதகத்தை தாமும் இழைக்கலாம் எனக் கருதுகின்றன. மனித உயிரை கிள்ளுக் கீரையாக மாற்றிய அவக்கேடு பிரபாகரனைச்சாரும்.
இன்று தமிழர்களின் வீட்டுப்படலைக்குப் பக்கத்தில் இராணுவம் நிற்கிறது. பல்கலைக்கழகமும் சோதனை இடப்படுகிறது. ரொறன்ரோவிலும், மொன்ரியலிலும் தமிழர்களின் வீட்டுப்படலைகளில் கனடாப் பொலிஸ் நிற்கிறது. வாட்டலு பல்கலைக்கழகத்தில் மணிமேகலையின் அட்சயபாத்திரத்தில் இருந்து வருவதுபோல் பாசிச மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆற்றில் இட்ட பொன் குளத்தில் கிடைத்தது போல் வன்னிச்சலவை வாட்டலுவில் கிடைக்கிறது. அவர்கள் தலையில் துண்டு போட்டு கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்படும் அவலக்காட்சி ஆhட்டிக்கண்டத்திற்கருகிலும் அரங்கேற்றபட்டுக் கொண்ருகிறது. உலகக் கீர்த்தி வாய்ந்த பல்கலைகழகம் தனக்கு நேர்ந்த அபகீர்த்தியை நினைத்து விக்கித்து திக்கித்து நிற்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைகழககத்திற்கு வன்னியிலிருந்து குதிரையில் வந்து பாஉ ஆன கஜேந்திரன்களின் (40 ஆயிரம் படையினரின் சடலங்களை தென்னிலங்கைக்கு அனுப்புவதாக பாராளுமன்றத்தில சூளுரைத்தவர்) நவீன மொஸ்தர்கள் வாட்டலு}விலும். எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் மாணவர்களை சேர்ப்பதில் உள்ள10ர் பல்கலைக்கழகங்கள் மாத்திரமல்ல, உலகப்பல்கலைகழகங்களும் தயக்கம் காட்டலாம்- தமிழர்கள் பேய் வழிபாட்டாளர்களாக இருக்கும் வரை.
பின்லாடன், அவனது சகாக்களை விட வல்லுனர்கள் என்ற பெயரும் புகழும் கிட்டி இருகிறது. எந்த நாட்டு விமான நிலையத்திலும், எந்த நாட்டு பேரூந்திலும் தமிழர்கள் ஏறினால் பக்கத்தில் இருக்கும் மனிதர்கள் சற்று தள்ளி உட்காரவேண்டிய, முகம்சுழிக்க வேண்டிய, பயந்து நடுங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருகிறது. இந்த அவல அனுபவம் அப்பாவித் தமிழர்களுக்கு இலங்கையிலும் தான். இதற்கெல்லாம் மூலகாரண கர்த்தாக்கள் யமப்பிரபாவும் சித்திரபுத்திர பொட்டுவும் தான்.
தமிழர்கள் கங்கையில் மூழ்கி எழுந்து இவர்களைத் துறக்காதவரை நரகப்பாதையிலிருந்து திருப்ப முடியாது. இந்த பிரகிருதிகளால் தமிழர்கள் பெரும் அனர்த்தங்களையும் அவலங்களையும் சந்திக்க வேண்டியநிலை உருவாகியிருக்கிறது.
திருப்பதிக்கே அல்வா கொடுத்ததுபோல் அமெரிக்க எப்பிஐஇற்கே பணம் வழங்க முற்பட்டவர்கள் சார்ந்த சமூகம் என்ற நிலையில் சந்தேகத்தின் தேடுதல் வெளிச்சம் சகல தமிழர்களினதும் தலையில் இடியாக இறங்கியுள்ளது. அதுவும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் உலகளாவிய அளவில் படரவிடப்பட்ட நிலையில். வடஅமெரிக்க பத்திரிகைகளிலெல்லாம் டாவின்சிகோட்டை விஞ்சிய நவீனமாக கதை போய்க்கொண்டிருக்கிறது.
புலிகளின் முகவர்கள் தாம் சட்டம் ஒழுங்கை பேணும் கண்ணியமான மனிதர்கள் போல் கதை விட்டுக்கொண்டு அகப்பட்டதை சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கதைகள் பரவுகின்றன. உலகத்தமிழர்களின் பணமும் பொருளும் என்னமாய் விரயமாகின்றன.
பனியில் விழுந்து, குளிரில் உறைந்து, இரத்ததை பிழிந்து உழைத்த பணம் உருட்டி மிரட்டி ஜம கின்னரர்களால் சூறையாடப்பட்ட பணம் (மனிதஉரிமை கண்காணிப்புக்குழுவின் அறிக்கையைப் பார்க்கவும் ) என்னமாய் விரயமாகிறது பாருங்கள். அது ஊருக்கு வராமல் போனதும் நல்லது தான். ஏனெனில் அது ஊருக்கு வந்தாலும் சிறுவர் சிறுமியரை உயிருடன் சிதையில் இருத்தவே பயன்படுத்தப்படும்.
தமிழர்களைப் பொறுத்தவரை இது தீர்மானகரமான வரலாற்று தருணம். காட்டு மிராண்டிகளைத் துறந்து ஜனநாயக சத்திகளை தமிழர்கள் பலப்படுத்த வேண்டிய தருணமிது.
அகதித்தமிழன் (நன்றி…. தமிழ்நியூஸ்வெப்)