தளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப்..!!

Read Time:2 Minute, 24 Second

201702031207442452_Coffee-face-Scrub_SECVPFஉடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி உண்டாகாமல் தடுக்க முடியும்.

உடலில் எண்ணெய் பூசி குளிப்பதால் ஈரப்பதம் வற்றாமல் காக்க முடியும். உடலிலுள்ள ஈரப்பதம் குறைவதும் சருமம் விரைவில் தளர்வதற்கு ஒரு காரணமாகும்.

வெறும் காபிக் கொட்டையில் அரைத்த பொடி சருமத்தை இறுகச் செய்யும். சுருக்கங்களை போக்கும். இறந்த செல்களை அகற்றும். வியர்வை, தூசினால் உண்டாகும் அழுக்குகளை களையும். அதனை வைத்து செய்யப்படும் இந்த குளியல் ஸ்க்ரப் தொய்வான சருமத்தை இறுக்கி, இளமையாக காண்பிக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஸ்ட்ராபெர்ரி – 3
காபி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்.

ஸ்ட்ராபெர்ரி ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை. சருமத்தை மெருகூட்டும். தேன் சுருக்கங்களை அகற்றும் மென்மையான சருமத்தை தரும்.

ஸ்ட்ராபெர்ரியில் விதையை நீக்கி மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேன் மற்றும் காபிப் பொடியை கலந்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் இந்த கலவையை தேய்த்து, குறிப்பாக கடினமான பகுதிகளில் அழுத்தி தேய்த்து, குளிக்கவும்.

இது இளமையான சருமத்தை தரும் அற்புதமான ஸ்க்ரப் ஆகும். நேரம் இருப்பவர்கள் தினமும் இதனை தேய்த்து குளிக்கலாம். இல்லையென்றாலும் வாரம் 3 நாட்கள் இப்படி செய்தால் நல்ல பலன் தரும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னேற விரும்பவில்லை: சோனம் கபூர்..!!
Next post வேறு ஒருவருடன் உறவு: பெண்ணுக்கு கொடூர தண்டனை..!! (வீடியோ)