மும்பையில் பொது கழிப்பிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி..!!

Read Time:1 Minute, 22 Second

201702031833508128_Three-killed-as-portion-of-public-toilet-collapses-in-Mumbai_SECVPFமும்பை புறநகர்ப் பகுதியான மன்கார்டில் உள்ள குடிசைப்பகுதியான இந்திரா நகரில் பொது கழிப்பிடம் உள்ளது. இதனை மகாராஷ்டிர வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி ஆணையம் பராமரித்து வருகிறது. மிகவும் பழமையான இந்த கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில், இன்று காலையில் கழிப்பிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக கழிப்பிடத்தினுள் இருந்த சிலர் செப்டிக் டேங்கினுள் விழுந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் பலியாகினர். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கட்டிடம் பராமரிப்பின்றி பரிதாபமான நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு முத்தத்துக்கு 19 டேக் எடுத்த `ராஜா ரங்குஸ்கி’ ஹீரோ..!!
Next post சர்க்கரை நோயால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?..!!