ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது ராணுவ நடவடிக்கையால் 100 பேர் பலி..!!
புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மியான்மர் நாட்டின் வடக்கே உள்ள ரக்கினே பகுதியில் ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், அரசுக்கு எதிராக 2012-ம் ஆண்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வந்தது. இந்த மோதலில் முஸ்லீம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதால் ஏராளமானோர் அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் முதல் ரக்கினே பகுதியிலிருந்து ரோஹிங்யா முஸ்லீம்களை அப்புறப்படுத்தும் பணியில் மியான்மர் ராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நடவடிக்கையின் போது மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதாகவும், ராணுவம் இனஅழிப்பில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், மியான்மர் ராணுவத்தினரின் நடவடிக்கையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா.சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பெண்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளானதாகவும், பலியானவர்களில் கணிசமான குழந்தைகளும் அடக்கம் எனவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த ஷீயிட் பின் ராத், மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராணுவ நடவடிக்கை குறித்து மியான்மர் அரசுக்கு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். மியான்மர் அரசு உடனடியாக ராணுவத்தின், மனித உரிமை மீறல் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி தலைமையில் மியான்மர் அரசு செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் மீது அதிக கவனம் செலுத்துமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து மியான்மர் அரசை வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating