ஏன் கருப்பு நிறம் அழகு தெரியுமா இதப் படிங்க..!!
பலர் சருமத்தின் நிறத்தில் பைத்தியமாக இருப்பார்கள். சருமத்தினை வெள்ளை நிறமாக மாற்ற மற்றும் பராமரிக்க தீவிரமாக முயற்சிப்பார்கள்.தினமும் ஊடகங்களில் சருமத்தை வெண்மை நிறமாக மாற்ற கிரீம்,லோசன்,சன் ஸ்கிரீன் மற்றும் விஞ்ஞான பூர்வமற்ற பொருட்கள் ஆகியவற்றை விளம்பரப் படுத்துகின்றனர். சருமத்தின் நிறம் அதன் உயிரியல் மற்றும் பரிணாமங்கள் காரணமாக பழுப்பு, கருப்பு நிறமாகக் காணப்படுகிறது.
மருத்துவ முறையில் வெள்ளை நிறத்தை விட அடர்ந்த(கருப்பு) நிறமே சிறந்தது என்று தெரியுமா? அடர்ந்த நிற சருமம் சூரிய ஒளிக்கு தகுந்த மாதிரி மாறுகின்றது.மெலனின் அளவையும் அதிகரிக்கிறது.மெலனின் மற்றும் இன்ன பிற காரணிகள் இணைந்து சருமத்திற்கு இயற்கையான குடையாக அமைந்து,தீங்கு மிக்க கதிர்வீச்சு மற்றும் புற ஊதா கதிர்கள் சருமத்தில் நுழைவதைத் தடுக்கிறது.
sun burn (வெயில் கொப்புளங்கள்) ஏற்பட வாய்ப்பு குறைவு: வெள்ளை நிறமுடைய நபர்கள் பெரும்பாலும் சூரிய ஒளி கதிர்வீச்சினால் அவர்களின் சருமத்தில் ஆரஞ்சு (அ) சிவப்பு நிறத்தில் அலர்ஜி போன்று ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும். சில நபர்களுக்கு வெயில் கொப்புளங்களைக் கட்டுப்படுத்த தீவிரமான சிகிச்சை தேவைப்படுகிறது.ஆனால் அடர்ந்த நிறம் உள்ளவர்கள் அதிக நேரம் கடற்கரையில் செலவிட்டாலும் சூரிய ஒளியின் காரணமாக கொப்புளங்கள் ஏற்படாது.
போட்டோ ஏஜிங் ஏற்படாது: ஆழமான சுருக்கங்கள்,மூக்கு மற்றும் கன்னங்களில் ரத்தக்கசிவு,அதிக வயதின் காரணமாக ஏற்படும் புள்ளிகள்,கேரட்டோஸிசன் என்ற கடினமான செதில் மீது ரத்தக்கசிவு ஆகியவை நீண்ட கால சூரிய ஒளியினால் வெள்ளை நிறம் கொண்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகை மாற்றங்கள் போட்டோஏஜிங் எனப்படும்.ஆனால் அடர்ந்த நிறத்தினால் இயற்கையான முறையில் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.அதிக சூரிய ஒளியிலும் குறைவான சுருக்கங்கள் மட்டுமே ஏற்படும்.
சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு குறைவு: வெள்ளையாக இருப்பவர்களுக்கு மெலனின் அளவு மிகக் குறைவாக இருக்கும்.அதனால் சூரிய ஒளியில் இருந்து வரும் புறஊதாக்கதிர்கள் நேரிடையாக தோலில் ஊடுருவி டி.என்.ஏ -வை சேதமடைய செய்கிறது மற்றும் சில ஆபத்தான புற்றுநோய் செல்களை ஊக்குவிக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அடர்ந்த நிறம் உள்ளவர்களுக்கு இயற்க்கை குடை அமைந்து கதிர்களைத் தடுத்து சருமத்தை சேதமில்லாமல் பாதுகாக்கிறது.
விரைவில் விட்டமின் டி கிடைக்கிறது : சிவப்பாய் இருப்பவர்களை விட கருப்பாய் இருப்பவர்களுக்கு சூரிய ஒளி வேகமாக உட்கிரகிக்கப்ப்படுவதால் விரைவில் விட்டமின் டி கிடைக்கிறது. இதனால் எலும்பு பற்கள் பலமாய் இருக்கும்
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating