விண்வெளி பயணத்தின் போது மனிதர்களின் மரபணுவில் மாற்றம் – நாசா..!!

Read Time:2 Minute, 31 Second

201701302017198562_Genetic-modification-of-human-beings-in-space-says-nasa_SECVPFமனிதர்கள் விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்று ஆராய்ச்சி முடிந்தவுடன் பூமிக்கு திரும்பும் போது அவர்களின் உடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்ற கேள்விக்கு பல வருடங்களாக பதில் கிடைக்காமல் உள்ளது.

ஒரு தரப்பு மாற்றம் இருக்கின்றது என்றும், மற்றொரு தரப்பு இல்லை என்றும் மாற்று கருத்துக்கள் உலாவி வருகின்றன.

இந்த நிலையில் விண்வெளிப் பயணங்களால் மனிதர்களின் மரபணு அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கூறியுள்ளது.

சுமார் ஒருவருடத்துக்கு மேல் விண்வெளியில் செலவிட்ட அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் அவருடன் பிறந்த இரட்டையரான மார்க் கெல்லி ஆகியோரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் நாசா இவ்வாறு தெரிவித்துள்ளது. கடந்த 2015-16ம் ஆண்டுகளில் ஸ்காட் கெல்லி, சுமார் 340 நாட்களை விண்வெளியில் ஆராய்ச்சி காரணமாக பயணித்துள்ளார். இது
பூமியில் அவரது வாழ்நாளில் 520 நாட்களுக்கு சமமானதாகும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த நியூயார்க்கின் வீல் கார்னர் பல்கலைக்கழக மரபணு ஆய்வுத்துறை தலைவர் கிறிஸ்டோபர் மேசன், விண்வெளிப் பயணம் காரணமாக ஸ்காட் மற்றும் அவரது சகோதரர் இடையிலான குரோமோசோம் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்டறிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் டிஎன்ஏ செயல்பாட்டிலும் மாற்றம் காணப்படுவதாக அவர் கூறினார்.

ஆனால், இதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மேரிலேண்ட்டில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ பீன்பெர்க் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு?..!!
Next post அந்த விசயத்தில் புதுமைப் பித்தனாக இருக்கலாமே…!!