இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு?..!!
தொன்மையான நமது பாரத பண்பாட்டில் எந்த ஒரு தானத்தையும் விட ‘அன்னதானம்’ உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஒருவரின் பசி நீக்கி அவருக்கு உணவளிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையை காட்டிலும் உயர்வானது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் தான் நம் கோயில்களில் தவறாமல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்றும் இந்தியாவெங்கும் பல கோயில்களில் திருவிழா காலங்களிலும், வார விஷேச பூஜை நாட்களின் போதும் அன்னதானம் வழங்கப்படுவது வாடிக்கையான நிகழ்வாகும்.
ஆனால் சில கோயில்களில் வருடத்தின் 365 நாட்களும், 3 வேலையும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அப்படி தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் ஒன்றான சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலில் தான் இந்தியாவின் மிகப்பெரிய சமையற்கூடம் இருக்கிறது. அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அம்ரித்சரில் அமைந்திருக்கிறது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப். உலகெங்கும் வாழும் சீக்கியர்களின் புனித கோயிலாக திகழும் இக்கோயிலானது தங்க தகடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் ‘பொற்கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : 500 வருடங்களுக்கு முன்பு சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக்ஜியின் முக்கியமான போதனைகளுள் ஒன்று உயிர் வாழ்வதற்கான அடிப்படையான உணவு சாதி, மத, இன, மொழி, சமூக அந்தஸ்து போன்ற எந்த வித பாகுபாடும் இன்றி எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : அதனை செயல்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்டது தான் ‘லங்கர்’ என்று அழைக்கப்படும் பொது சமையல் கூடம் ஆகும். பொற்கோயிலுக்கு அருகில் இருக்கும் இந்த லங்கரில் ஒரு நாளைக்கு மூன்று வேலையும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் பேர் வரை உணவருந்துகின்றனர்.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இத்தனை பேருக்கும் இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது தான் இங்கே வியக்கத்தகும் அம்சம் ஆகும். ரொட்டி, பருப்பு, காய்கறிகள், அரிசி போன்றவை இங்கே பரிமாறப்படுகின்றன. அசைவத்துக்கு அனுமதி கிடையாது.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இத்தனை பேருக்கும் உணவு தயாரிக்க ஒரு நாளைக்கு 12,500 கிலோ கோதுமை மாவு, 1,500 கிலோ அரிசி, 13,000 கிலோ பருப்பு, 2,000 கிலோ காய்கறிகள் தேவைப்படுகின்றன. இவை அனைத்துமே கொடையாக வழங்கப்படுகிறது. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா ?
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இதோடு மூன்று வேலை உணவும் கைகளாலேயே தாயாரிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கவும், பரிமாறவும், சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை கழுவுவதற்கும் விருப்பம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்யலாம்.
ஸ்ரீ. ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : இங்கே உணவருந்த வருபவர்கள் யாராக இருந்தாலும் அனைவருடனும் ஒன்றாக தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடிந்த பின்பு உங்களால் முடிந்தால் இங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று முடிந்த விதத்தில் உதவி செய்திடுங்கள்.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : அப்படி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுகள் இந்த லங்கரில் தயார் செய்யப்படுகின்றன. இதுவரை இங்கே சாப்பிட வந்து யாரும் இல்லை என்று திருப்பி அனுப்பட்டது கிடையாதாம்.
ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் – லங்கர் : அப்படி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுகள் இந்த லங்கரில் தயார் செய்யப்படுகின்றன. இதுவரை இங்கே சாப்பிட வந்து யாரும் இல்லை என்று திருப்பி அனுப்பட்டது கிடையாதாம்.
Average Rating