அம்மா பாடல் புகழ் கவிஞர் அஸ்மின் – தாஜ்நூர் இணையும் ‘கரிச்சான் குருவி’..!!
வானே இடிந்ததம்மா’ என்ற அம்மா இரங்கல் பாடல் மூலம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஈழத்து கவிஞர் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் ‘நான்’ திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ பாடலை எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜிப்ரான் இசையில் ‘அமரகாவியம்’ படத்தில் அஸ்மின் எழுதிய ‘தாகம் தீர கானல் நீரை’ பாடலுக்காக 9-ஆவது ‘எடிசன்’ திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியர் விருதினை பெற்றவர்.
‘காதல்’ சுகுமாரின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கடந்த வருடம் வெளிவந்த ‘சும்மாவே ஆடுவோம்’ திரைப்படத்தில் அஸ்மின் எழுதிய ‘முத்து முத்து கருவாயா’ பாடல் அஸ்மினுக்கு மிப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது. கவிஞர் அஸ்மின் பாடல் எழுதி மிக விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்தான் ‘கரிச்சான் குருவி”.
பிரபு தேவா நடித்த ‘ராசையா’, விவேக் நடித்த ‘நான்தான் பாலா’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கம்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘வம்சம்’ ,’எத்தன்’, ‘ஸ்ரோபரி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த தாஜ்நூர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆஸ்கார் நாயகனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்தவர்.
‘இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஏஞ் சண்டாளனே’ எனத்தொடங்கும் பாடலை கவிஞர் அஸ்மின் எழுதியுள்ளார். ஏனைய பாடல்களை அமரர் நா.முத்துக்குமார், தனிக்கொடி, தமயந்தி, மீனாட்சி சுந்தரம், கலீல் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் அஸ்மின் எழுதிய ‘சண்டாளனே’ பாடல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாடலென்பதால் இசை வெளியீட்டுக்கு முன்பாகவே இந்த பாடலினை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இந்தப் பாடலை வேல்முருகன் மற்றும் ஆழா ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் சரவணன் அறிமுகமாகின்றார்.நாயகியாக ‘டூரிங்ஸ் டாக்கிஷ்’ படத்தில் நடித்த சுனு லட்சுமி நடித்துள்ளார். அவர்களோடு ‘நண்டு’ ஜெகன், கோவை சரளா, செண்ட்டராயன், டி.பி கஜேந்திரன், ஆர்.வி உதயகுமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜெரால்ட், என்.இளங்கோ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீடு மிக விரைவில் நடைபெறவுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating