மூக்கில் இருக்கும் அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..!!

Read Time:4 Minute, 0 Second

whiteheadsகரும்புள்ளிகளைப் போன்றே வெண்புள்ளிகளும், மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த வெண்புள்ளி பிரச்சனையானது ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும் வரும்.

வெண்புள்ளிகளானது சருமத்துளைகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அல்லது அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் அடைப்பு ஏற்படுவதால் வரும். வெண்புள்ளிகளை நீக்குவது என்பது சற்று கடினமானது. இங்கு அந்த அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீர் கொண்டு பேஸ்ட் செய்து, வெண்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின் தவறாமல் டோனரைப் பயன்படுத்துங்கள்.

ஆவிப்பிடிப்பது
ஆவிபிடிப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பளிச்சென்று பொலிவோடு இருக்கும். அதற்கு ஆவி பிடித்த பின், சுத்தமான துணியால் சருமத்தை நன்கு துடைத்து எடுக்க வேண்டும்.

சர்க்கரை
சர்க்கரையை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவை முழுமையாக வெளியேறும்.

ஓட்ஸ்
ஓட்ஸை பொடி செய்து தயிர் சேர்த்து கலந்து, மூக்கு, கன்னம் மற்றும் தாடை பகுதிகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் வறட்சி அடையாமல் மென்மையாக இருக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீருடன் சரிசம அளவில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், வெண்புள்ளிகள் மறைந்துவிடும்.

பட்டை
பட்டை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெண்புள்ளிகளை மட்டுமின்றி, முகப்பருக்களையும் போக்கும்.

கடலை மாவு
கடலை மாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்குவதோடு, வெண்புள்ளிகளும் உருவாகாமல் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலவீனமானவர்கள் இந்த வீடியோ பார்க்கத்தடை..!! (வீடியோ)
Next post என் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது: சன்னிலியோன்..!!