தீக்கிரையான நடுக்குப்பம் மீன் மார்க்கெட்: புணரமைப்பு பணிக்கு ராகவா லாரன்ஸ் 10 லட்சம் உதவி..!!!

Read Time:1 Minute, 39 Second

201701270952456392_Raghava-Lawarence-ready-to-give-10-Lakhs-for-the-destroyed_SECVPFஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அவசர சட்டம் கொண்டுவந்த பிறகும், நிரந்தர சட்டம் வேண்டி போராட்டம் தொடர்ந்தது.

அப்போது திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள நடுக்குப்பம் மீன் மார்க்கெட் தீக்கிரையானது. அங்கு மீன் வியாபாரம் செய்து பிழைத்து வந்த மக்கள் தங்களது எதிர்கால வாழ்வாதாரத்தை இழந்து கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களது துயரநிலையை பற்றி அறிய வந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தீக்கிரையான நடுக்குப்பம் மீன் மார்க்கெட்டை புணரமைக்கும் பணிக்கு 10 லட்சம் ரூபாய் உதவி செய்வதாக நேற்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியை காண..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் நடு ரோட்டில் காதல் ஜோடி கட்டிப்புரண்டு சண்டை..!!
Next post பார்க்க தவறாதீர்கள் வினோதமான உலக சாதனைகள்..!! (வீடியோ)