வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமறைவு??..!!
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிக்கை வெளியிட்ட அனந்தி சசிதரன் இப்பொழுது எங்கே போய்விட்டார்??
வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் உறவினர்கள் அனந்தி சசிதரனை தேடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுத்தத்தில் காணாமல் போனவர்கள் சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது போனால் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் 18.01.2017 ஆம் திகதி அன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
இவ்வறிக்கை பெரும்பாலான தமிழ் ஊடகங்களிலும் (இணையத்தளங்களில்) பிரசுரமாகியிருந்ததை தமிழ் மக்ககள் அனைவரும் வாசித்திருப்பார்கள் என நம்புகின்றோம்.
• உறவுகளை பறிகொடுத்துவிட்டு, துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கித் தவிக்கும் அப்பாவி சனங்களை தூண்டிவிட்டு, உண்ணாவிரதம் இருக்கவைத்துவிட்டு, வவுனியாவில் காணாமற்போனோர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் காலவரையறையற்ற உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் அனந்தி சசிதரன் கலந்துகொள்ளாததன் மர்மம் என்ன??
• அனந்தி சசிதரனின் கணவன் எழிலன் கிடைத்துவிட்டாரா??
• நீண்டகாலமாக காணாமல் போனவர்களின் உறவுகளை முன்னிறுத்தி, தலைமை தாங்கி போராட்டம் நடத்திய வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சாகும்வரையிலான உண்ணவிரத போராட்டத்தில் மட்டும் தன்னை முன்னிலை படுத்தாமல் எங்கே ஒழிந்துகொண்டார்?? (சிலவேளை யாழிலிருந்து வவுனியா வரை, அவர் வருவதற்கான பயண செலவுக்கான பணம் இல்லையோ??)
• சாவுக்கு பயந்துவிட்டாரா?? அல்லது உண்ணாவிரத்தில் யாராவது இறந்தால் பின்பு தாங்கள் வந்து தலைகாட்டலாம் என எண்ணியுள்ளார்களா??
″ யுத்தத்தையும், யுத்ததால் இழந்தவர்களின் வலிகளையும், மாவீரர்களின் தியாகங்களையும் மூலதானமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தும் (சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், , பா.டெனீஸ்வரன், ஐங்கரநேசன்…} போன்ற தமிழ் அரசியல்வாதிகள் எங்கே போய்விட்டார்கள்??
வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சாகும்வரையிலான உண்ணவிரத போராட்டம் சம்பந்தமாக இவர்கள் மௌனம் சாதிப்பதேன்??
• தமிழ்தேசிய கூட்டமைபின் தலைவர் சம்பந்தன், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா போன்றோர் கூட இது சம்பந்தமாக எந்தவித அறிக்கையும் வெளியிடாததன் காரணம் என்ன?? அரசாங்கம் சினம் கொள்ளும் என்பதா??
• பல்வேறுபட்ட பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினையில் ஆர்வம் கொண்டிருப்பவர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் போது, எங்கும், எப்பொழுதும் நாலுபேருடன் காட்சியளித்து படம்காட்டும் சிவாஜிலிங்கம் எங்கே போனார்??
ஒருவேளை சாகும்வரையிலான உண்ணவிரத போராட்டம் இருப்பவர்கள் யாராவது இறந்தால் இவர்கள் அனைவரும் பிரசன்னமாவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Average Rating