இயற்கை பொருட்களை கொண்டு சரும முடிகளை நீக்கும் வழிகள்..!!

Read Time:2 Minute, 42 Second

201701251110412108_natural-ways-of-removing-Skin-hair_SECVPFசருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள்.

இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம்.

* சர்க்கரையில் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முடி வளரும் திசையை நோக்கி தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 4 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, சருமத்தின் தேவையற்ற இடங்களில் வளரும் முடியின் மீது தடவி, 10-15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனையும் வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், நல்ல மாற்றம் தெரியும்.

* மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் முடி வளரும் இடத்தில் தடவி, சிறிது நேரம் வட்ட சுழற்சியில் தேய்த்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

* ஒரு முட்டையின் வெள்ளைக்கருவில், 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்த பின் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

* தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளானது அகலும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முச்சக்கர வண்டி சாரதியால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்..!! (வீடியோ)
Next post தண்ணீர் குடம் மாய­மா­னதால் மாமி­யாரை கொன்ற மரு­ம­­கன்..!!