தண்ணீர் அள்ளித்தரும் ஆரோக்கியம்..!!

Read Time:2 Minute, 27 Second

201701241104416467_Water-Brings-health_SECVPFநமது உடல் செயல்பாடுகள் சீராக நடைபெற தண்ணீர் மிகவும் முக்கியமானது.

அதிலும் தினமும் காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால் பலவித பலன்கள் ஏற்படும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் தண்ணீர் பருகினால் உண்டாகும் நன்மைகள்…

இப்படி தண்ணீர் பருகுபவரின் உடம்பில் ரத்த அழுத்தம் சீரான முறையில் இருக்கும்.

தினமும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், அதிக உடல் எடை விரைவில் குறையும்.

வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். நீரில் உள்ள சத்துகள், வயிற்றுப் படலத்தில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்கின்றன.

உடலின் இன்சுலின் அளவு சீராக்கப்படுகிறது. இதனால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது.

மலச்சிக்கல் பிரச்சினையால் கஷ்டப்படுவதற்கு முக்கியக் காரணம், போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான். எனவே தினமும் இந்தச் செயல் முறையை தவறாமல் பின்பற்றி வந்தால், சீக்கிரமாகவே மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

இப்படி வெறும் வயிற்றில் தினமும் தண்ணீரைப் பருகிவரும் பழக்கத்தின் மூலம் சில தீவிரமான நோய்களும் குணமாகின்றன என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வருவதன் மூலம், அன்றைய நாள் முழுவதும் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படலாம். என்றும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

இப்பழக்கத்தின் மூலம் இதயத்தில் ரத்த அழுத்தம் சீராக இருப்பதால், இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் நமது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கழிவுகள் வெளியேற்றப்பட்டு, உறுப்புகளும் சருமமும் பொலிவு பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் உண்ணாவிரதம் தொடர்கிறது ; ஆதரவாக தமிழ் அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதிப்பு..!!
Next post புலியுடன் விளையாடியவருக்கு நிகழ்ந்த விபரீதம்..!! (வீடியோ)