பீட்டா தலைமையகத்தை முற்றுகையிட்டு அமெரிக்க தமிழர்கள் ஜல்லிக்கட்டு முழக்கம்..!!

Read Time:2 Minute, 15 Second

cats-23-1485119488வலியுறுத்தி அமெரிக்க வாழ் தமிழர்கள் பீட்டா அமைப்பின் தலைமையகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் இருந்தது. இந்தாண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனதால் வெகுண்டெழுந்த இளைஞர் சமுதாயம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றது.

இதையடுத்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அலங்காநல்லூர், சென்னை மெரீனா கடற்கரை, மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் தொடர்கிறது.

இதேபோல வெளிநாடுகளிலும் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பின் தலைமையகம் முன்பு திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் அமெரிக்காவின் 13 மாகாணங்களில் வசித்து வரும் தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர். கருப்புச் சட்டை அணிந்தும், கைகளில் பதாதைகளை ஏந்தி பீட்டாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலுக்கு அருகே நிற்கும் இளைஞர்களை நெருங்க முடியாத போலீஸ்.. ஆவேச முழக்கமிடும் மாணவர்கள்..!! (வீடியோ)
Next post டெல்லியில் நடந்த சந்திப்பு இதானா? – கொந்தளிக்கும் மக்கள்..!! (வீடியோ)