விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம்: விஜய் சேதுபதியை எதிர்த்து மாணவர்கள் கோஷம்..!!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காந்திகிராம பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகம் நுழைவு வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி மாணவர்கள் மத்தியில் பேசினார்.
விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு
அவர் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சில மாணவர்கள், நடிகர்கள் யாரும் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டாம். உடனே திரும்பி போங்கள் என்று கோஷம் போட்டனர்.
மாணவர்கள் கூறியதாவது:- காந்தி கிராம பல்கலைக்கழகம் அருகே கருப்பன் என்ற சினிமா படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிங்கம் புலி ஆகியோர் நடித்து வருகின்றனர். நாங்கள் போராட்டம் செய்த போது மாணவர்கள் சிலர் கருப்பன் என்ற சினிமா ஜல்லிக்கட்டு சம்மந்தமான கதை என்பதால் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேச சொல்லலாம் என்று அவரிடம் கேட்டனர்.
ஆனால், படப்பிடிப்பு இருக்கிறது வர வாய்பில்லை என்று கூறிவிட்டு படப்பிடிப்பு முடிந்த பின்னர் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார். தற்போது படப்பிடிப்பு குழுவினர் எங்களிடம் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து வருகிறோம் என்றனர் சரி என்றோம்.
ஆனால் பின்னர் படப்பிடிப்பு இருக்கிறது. அதனால் படப்பிடிப்பின் இடைவேளையின் போது வந்து கலந்து கொள்வதாக விஜய் சேதுபதி
கூறுவதாக கூறி சென்றனர். அதே போல் படப்பிடிப்பு முடிந்து சாப்பிட்டுவிட்டு வந்துள்ளார்கள்.
விளம்பரம் தேட வேண்டாம்
உண்மையிலேயே ஜல்லிக்கட்டுக்கும், அதற்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தருபவராக இருந்திருந்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு எங்களுக்கு ஆதரவு தந்திருக்க வேண்டும். விளம்பரத்திற்காக மட்டுமே வரும் நடிகர்கள் எங்களது போராட்டத்திற்கு தேவையில்லை என்று கூறினர்.
மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டதால் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சிங்கம்புலி மற்றும் அவரது குழுவினர் 5 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளோட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றனர்.
மாணவர்கள் நடிகர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating