விடை தெரியாத நோய் சோரியாசிஸ்..!!

Read Time:3 Minute, 38 Second

201612010925116262_unknown-illness-psoriasis_SECVPFசோரியாசிஸ் என்ற வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த சோரியாசிஸ் வர என்ன காரணம் என்பதை கண்டறிய இன்று வரை ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒன்றும் பிடிபடவில்லை. சோரியாசிஸை தமிழில் ‘காளான் சான்படை‘ என்று அழைக்கிறார்கள்.

சோரியாசிசில் நிறைய வகைகள் உண்டு. இருந்தாலும் பொதுவாக சொல்வது இது வந்தால் தோல் சிவந்து தடித்துப் போவதுடன், தாக்கிய இடத்தில் தகடுகள் போல செதில் செதிலாக உதிர்ந்து வரும். இதை பெயர்த்து எடுத்தால் ஒரு சின்னத்துளியாக ரத்தம் எட்டிப் பார்க்கும்.

இதற்கு வைத்தியம் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்து விட்டுத் தானாக மறைந்து குணமாகி விடும். குணமான பின் சோரியாசிஸ் வந்து போன சுவடு கூடத் தெரியாது.

ஆனாலும் குணமாகிவிட்டது என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள முடியாது. இது குணமாவதே மறுபடியும் வருவதற்குத்தான். வெயில் காலத்தில் இது ஒருவரை தாக்கினால் அடுத்த வெயில் காலத்துக்கு மீண்டும் வந்துவிடும். குளிர்காலம் என்றால் மீண்டும் அடுத்த குளிரில் தவறாமல் ஆஜராகிவிடும். இதை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுவரை பலன் கிடைக்கவில்லை. எப்படி வருகிறது என்பதற்கு விடை கிடைத்தால்தானே குணப்படுத்தும் வழியும் கிடைக்கும். வருவதற்கு காரணம் பூச்சிகளா? வைரசா? பாக்டீரியாவா? சாப்பிடும் உணவா? பரம்பரை நோயா? எதுவும் பிடிபடவில்லை, ஆராய்ச்சியாளர்களுக்கு.

சோரியாசிசால் அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கப்படுவதில்லை. உலகத்தில் இந்த நோய் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. உலகம் முழுவதும் இருக்கிறது. இருந்தாலும் ஏனோ நீக்ரோக்கள், செவ்விந்தியர்கள், ஜப்பானியர்களை இது அதிகமாக தாக்குவதில்லை. சோரியாசிசால் சோரியாடிக் ஆர்த்ரிடீஸ் என்ற ஒருவகை பாதிப்பு வரலாம். இது வந்தால் உள்ளங்கை, உள்ளங்கால் விரல்கள் கோணிக்கொள்ளும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சோரியாசிஸ் சரியானால் விரல்களின் கோணலும் சரியாகிவிடும்.

ரோடு போட பயன்படுத்தப்படும் தாரை மூலப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்து மூலமே இந்த நோய் ஓரளவுக்கு குணமாகிறது. விடை தெரியா நோய்களில் இதுவும் ஒன்று!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெரினா போராட்டத்தில் குதித்த காவல் துறை..!! (வீடியோ)
Next post 10 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் நீங்கா கருமையைப் போக்கும் அற்புத மாஸ்க்..!!