ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த உலக தமிழ் சொந்தங்கள்..!!

Read Time:2 Minute, 31 Second

A8C14412-A03E-486E-A7F5-71934CE683FD_L_styvpfஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மெரீனா கடற்கரையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இன்று இளைஞர்களும், மாணவர்களும் திரண்டுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டமானது உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவி வருகிறது.

அல்ஜிரியா நாட்டின் சகாரா பாலைவனப் பகுதியில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டில் அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள மேம்பாலத்தின் அருகில் தமிழர்கள் எழுச்சியுடன் போராட்டம் நடத்தினர்.

சிங்கப்பூர் ஹாங் லிங் பார்க் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் 300-க்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பெல்ஜியம் தலைநகர் புருசெல்சில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.

டென்மார்க் நாட்டின் போபென்ஹகன் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது.

ஜெர்மனியின் கார்ல்ச்ருஹி பகுதியில் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர்கள் அதிகம் வாழும் துபாயின் அல் கராமா பார்க் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென் கொரியாவின் ஜிஜு பல்கலைக் கழகத்தில் திரண்ட தமிழ் சகோதர சகோதரிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மை குறைவிற்கு இதுவும் ஒரு காரணம்..!!
Next post  ஜல்லிக்கட்டும் பீட்டாவும் போராட்டங்களும்..!! (கட்டுரை)