அன்னப்பறவையினால் 3.2 கி.மீ தூரம் மெதுவாக நகர்ந்த ரயில்..!! (வீடியோ இணைப்பு)
அன்னப்பறவை ஒன்றினால் ரயிலொன்றின் பயணம் தாமதமான சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
சௌத் வெஸ்ட் ட்ரெய்ன் நிறுவனத்தின் ரயிலொன்று டெடிங்டன் நகரிலிருந்து லண்டனை நகரை நோக்கி புறப்பட்டது.
இந்த ரயில் பயணித்த தண்டவாளத்தில் அன்னப்பறவையொன்று நடந்து சென்றது. அப்பறவையின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக ரயிலை சாரதி மெதுவாக இயக்கினார்.
இதனால் மணித்தியாலத்துக்கு சுமார் 3.2 கிலோமீற்றர் (2 மைல்) வேகத்தில் சுமார் 3 கிலோமீற்றர் தூரம் ரயில் ஊர்ந்து சென்றது.
லண்டன் கிங்ஸ்டன் ரயில் நிலையத்தை இந்த ரயில் அடைந்தபோது ரயிலுக்கு முன்னால் ஒரு மீற்றர் தூரத்தில் அன்னப்பறவை நடந்து கொண்டிருந்ததை சிலர் படம்பிடித்துள்ளனர்.
23 வயதான டேன் பில்லிங்ஷர்ஸ்ட் என்பவர் இது தொடர்பாக கூறுகையில், ரயில் பயணிகள் பலர் லண்டனுக்கு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
ரயில் மெதுவாக சென்றதால் அவர்களில் பலர் பெரும் விசனமடைந்தனர் எனத் தெரிவித்தார்.
இந்த ரயிலில் பயணம் செய்த 20 வயதான யுவதி ஒருவர் இது குறித்து கூறுகையில், ரயில் மெதுவாக நகர்வது குறித்து பயணிகள் பலரும் எரிச்சலடைந்தனர்.
ஆனால், இதற்கான காரணத்தை அறிந்தவுடன் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating