உங்கள் பல்லுக்கும் ஆண்குறியின் விறைப்புத்தன்மைக்கும் சம்பந்தம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?..!!
இளம்தம்பதிகளின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய. அவர்களிடையேயான உறவு சிறக்க, உடலுறவு இன்றியமையாததாகிறது.
இளைஞர்களின் இன்றைய நவநாகரீக வாழ்க்கைமுறையே, அவர்களின் உடல்நலத்திற்கு பெரும்தீங்காக அமைகிறது. இந்த வாழ்க்கைமுறையானது, அவர்களின் உடலுறவுமுறைக்கு பெரும் ஆபத்தாகிறது என்று அமெரிக்காவின் யேல் பல்கலைகழக கார்டியோவாஸ்குலார் மற்றும் பாலியல் சுகாதாரம் துறை பேராசிரியர் சார்லஸ் வால்கர் கூறியுள்ளார்.
இனிய இல்லறத்திற்கு அடிப்படையான உடலுறவிற்கு, ஆண்குறியின் விறைப்புத்தன்மை முக்கியமானதாகும். கீழக்கண்ட எளிய வழிமுறைகளை சிரத்தை எடுத்து மேற்கொண்டாலே, ஆண்குறி விறைப்புத்தன்மையில் ஏற்படும் குறைபாட்டை திறம்பட களையலாம்…
மருந்துகளின் முக்கியத்துவம்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள், உடல் வலிக்கான மருந்துகள் உள்ளிட்டவைகளின் அதீத பயன்பாடு, ஆண்குறியின் விறைப்புத்தன்மையை அதிகம் பாதிக்கின்றன.
ஆண்குறியின் விறைப்புத்தன்மையை அதிகம் பாதிக்கும் காரணிகளில், அலர்ஜி மருந்துகள் மற்றும் ஜலதோஷ நிவாரணிகளுக்கு முக்கிய பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் இடையை கண்காணியுங்கள்..
இடுப்பு அளவு 35 இஞ்ச் என்ற அளவில் இருப்பவர்களைவிட, 39 இஞ்ச் இருப்பவர்களுக்கு, ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு இருக்க இருமடங்கு வாய்ப்பு அதிகம்.
விஸ்செரல் கொழுப்பே, இடுப்பு அளவு அதிகரிக்க காரணம் ஆகும். இந்த விஸ்செரல் கொழுப்பு, ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்ட்ரானின் செயல்பாடுகளை தடுக்கிறது. இதன்காரணமாக, ஆண்குறியின் விறைப்புத்தன்மை பாதிக்கப்படுகிறது.
புகைப்பதை கைவிடுஙகள்…
புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடுவிளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சிகரெட் புகைத்தல், ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாட்டை தோற்றுவிக்கும் முக்கிய காரணி ஆகும்.
சிகரெட் புகைப்பதால் உடலில் உண்டாகும் நஞ்சு, நேரடியாக ரத்தஓட்டத்தில் கலக்கிறது. இது ஆண்குறிக்கு ரத்தம் செயல்வதை நேரடியாக தடுக்கிறது.
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட 51 சதவீத வாய்ப்பு இருப்பதாக சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிகரெட் புகைப்பதை கைவிட்டவர்களுக்கு, முதல் ஆண்டிலேயே ஆண்குறி விறைப்புத்தன்மையில் 25 சதவீத முன்னேற்றம் ஏற்படுவதாக ஈரானில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிடுங்கள்…
பணிதொடர்பான மனஅழுத்தமே, உடலுறவில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயர்பதவியில் இருக்கும் 40 முதல் 50 வயதினருக்கு, பணி தொடர்பான மனஅழுத்தம் அதிகமாக இருப்பதால், ஆண்குறி விறைப்புத்ன்மை குறைபாடு அதிகளவு காணப்படுகிறது.
இதே பணி தொடர்பான மனஅழுத்தத்துடனேயே வீட்டுக்கு வந்தால், அந்த எரிச்சலை தன் துணையுடன் காட்டிவிட்டு, உடலுறவிலும் ஈடுபாட்டுடன் ஈடுபடுவதில்லை. இதன்காரணமாக, தம்பதியினரிடையே தாம்பத்ய உறவில் விரிசல் உண்டாகிறது.
போதிய தூக்கம்
போதிய அளவிலான தூக்கம் என்பது உடல்நலத்திற்கு அத்தியாவசிய ஒன்றாகும். அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகழகம் நடத்திய ஆய்வில், 5 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்ட்டோஸ்ட்ரான் செயல்பாடு குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக, உடலுறவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
தூக்கமானது, மூளையில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதனால், தூக்கமின்மையால் இந்த ஹார்மோன்களின் செயல்பாடுகள் கடுமையாக பாதிப்படைகின்றன. இபந்த ஹார்மோன்களே, ஆண்குறி விறைப்புத்தன்மைக்கும் காரணமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரவுநேரத்தில் தொடர்ச்சியான 7 முதல் 8 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம், இல்லையெனில் குறைந்தது 6 மணிநேரமாவது தூங்க வேண்டும்.
பற்கள் பாதுகாப்பு
பற்களில் பிரச்னை இருப்பவர்களுக்கு, ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு இருக்க மும்மடங்கு வாய்ப்பு இருப்பதாக துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு கொண்ட 5ல் 4 ஆண்களுக்கு, பற்கள் சார்ந்த நோயின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் பிரிட்டிஷ் பற்கள் சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறந்த முறையில் பல்துலக்காததினால், வாய் வழியாக நம் உடலிற்குள் புகும் நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகள், ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. ரத்தநாளங்கள் மற்றும் ரத்த ஓட்டத்தை கடுமையாக பாதிக்கின்றன. இதனால் ஆண்குறிக்கு செல்லும் ரத்தம் தடைபட்டு அங்கு பிரச்னை துவங்குகிறது.
வியர்வை நல்லது
உடற்பயிற்சி செய்வது ஆண்குறிக்கு மிகவும் நல்லது. ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாடு உடையவர்கள். 8வார கால அளவிற்கு வேர்க்க, விறுக்க, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டால் இந்த குறைபாட்டிலிருந்து விடுதலை அடையலாம் என்ற ஜர்னலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேர்க்க, விறுக்க செய்யும் உடற்பயிற்சிகளால், ரத்த நாளங்கள் விரிவடைந்து ரத்தஓட்டம் சீராக இருப்பதால், ஆண்குறி உள்ளிட்ட உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் சீராக பாய்ந்து அவைகள் சீராக இயங்க உதவுகிறது.
மடியில் லேப்டாப் வேண்டாமே…
லேப்டாப் எனப்படும் மடிக்கணினி இயங்கும்போது அதிலிருந்து அதிகப்படியான வெப்பம் வெளியேறுகிறது. அத்தகைய உபகரணத்தை நாம் நம் மடியில் வைத்து இயக்கும்போது, அதிலிலிருந்து வெளியாகும் வெப்பம் நேரடியாக நம் உடலிற்குள் செல்கிறது. இந்த வெப்பம், டெஸ்டோஸ்டீரான் செயல்பாட்டினை குறைந்து விந்து உற்பத்தியை அடியோடு பாதிக்கிறது.
இத்தகைய எளிய வழிமுறைகளை கவனமாக மேற்கொண்டாலே, ஆண்குறி விறைப்புத்தன்மை குறைபாட்டை எளிதில் களையலாம்!
Average Rating