தேன் கொண்டு உங்கள் முகத்தை மெருகேற்ற 4 வழிகள்..!!

Read Time:2 Minute, 10 Second

13-1484302717-chocolateதேன் ஆரோக்கியத்திற்கும் சரி, அழகிற்கும் சரி. பல அற்புதமான நன்மைகளை தருகிறது. சுருக்கங்களை போக்கவும், மிருதுவான சருமத்திற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் கூட அதனை பயன்படுத்துகிறோம். தேன் எவ்வாறு உபயோகித்தால் சுருக்கமில்லாத சருமம் பெறலாம் என தெரியுமா? இதைப் படியுங்கள்.

தேன் ஸ்க்ரப் : தேவையானவை : தேன் ஆலிவ் எண்ணெய் எலுமிச்சை சாறு நாட்டு சர்க்கரை மேல் சொன்ன எல்லாவ்ற்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படியாக மெருகேறும்.

சுருக்கங்கள் போக்கி மென்மையான சருமம் கிடைக்கும். முட்டை, தேன் : தேவையானவை : முட்டையின் மஞ்சள் கரு – 2 தேன் – 2 ஸ்பூன் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக கலக்கி அதனுடன் தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். மிகவும் வறண்டிருக்கும் சருமத்திற்கு நல்ல பலனைத்தரும். அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

ஷியா பட்டர் , தேன் ஷியா பட்டருடன் தேன் கலந்து தலை முதல் கால் வரை தடவி 15 நிமிடம் கழித்து குளியுங்கள். நேரமிருந்தால் தினமும் செய்யலாம். இல்லையென்றால் வாரம் இருமுறை செய்தால் சருமம் பொலிவாக இருக்கும்.

சாக்லேட், தேன் : சாக்லேட்- 6 ஸ்பூன் தேன் – 2 கப் க்ரேப் விதை எண்ணெய்- அரை கப் இந்த மூன்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதன்பின் இவற்றை உடல் முழுவதும் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தேகம் மிருதுவாக மின்னும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்னந்தோப்புக்குள் பதுங்கிய ராஐநாகம்.. கையால் பிடித்த இளைஞன்..!! அதிர்ச்சி வீடியோ
Next post ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய ஒலிம்பிக் நாயகன்..!!