மொஸ்கோ ஹோட்டலில் டொனால்ட் ட்ரம்ப் படுக்கையில் சிறுநீர் கழித்தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ..!!
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் 5 வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய ஹோட்டலொன்றில் விலைமாது ஒருவரிடம் பாலியல் உறவு கொண்டதாகவும் ஹோட்டல் அறையின் படுக்கையில் சிறுநீர் கழித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பாலியல் நடவடிக்கைகள் அடங்கிய வீடியோ ஒளிப்பதிவுகள் ரஷ்ய புலனாய்வாளர்களிடம் இருப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் குறித்த பல தகவல்களை ரஷ்ய புலனாய்வுத்துறையினர் சேகரித்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
டொனால்ட் ட்ரம்பை மிரட்டுவதற்கு இந்த இரகசிய ஆவணங்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரித்தானிய புலனாய்வு அமைப்பின் உளவாளியான கிறிஸ்டோபர் டேவிட் ஸ்டீலினால் தொகுக்கப்பட்ட ஆவண மொன்றில், இது தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சி.என்.என். தொலைக்காட்சி இத்தகவலை முதலில் வெளியிட்டது.
மொஸ்கோ ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் தங்கியிருந்த டொனால்ட் ட்ரம்ப் பாலியல் தொழிலாளிகள் பலரை ஹோட்டல் அறைகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் ஹோட்டல் அறையின் படுக்கையில் டொனால்ட் ட்ரம்ப் சிறுநீர் கழித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப், இச் செய்திகள் பொய்யானவை எனக் கூறியுள்ளார். தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவுடன் நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பங்குபற்றிய டொனால்ட் ட்ரம்ப், தன்னைப் பற்றி உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதாக குற்றம் சுமத்தினார்.
ரஷ்யா உட்பட வெளிநாடுகளுக்கு தான் பயணம் செய்யும் போதெல்லாம், ஹோட்டல் அறைகளில் இரகசிய கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதில் தான் கவனமாக இருப்பது வழக்கம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு மொஸ்கோவில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகு ராணி போட்டியின்போது தான் மொஸ்கோவுக்குச் சென்றிருந்ததாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அக் காலத்தில் மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளை நடத்தும் நிறுவனத்தின் உரிமையாளராக டொனால்ட் ட்ரம்ப் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
‘என்னைச் சூழ மெய்ப் பாதுகாவலர்கள் இருப்பர். ‘உங்கள் ஹோட்டல் அறைகளில் மற்றும் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கே கெமராக்கள் இருக்கக்கூடும் என நான் அவர்களுக்கு எப்போதும் கூறுவேன்’ என டொனால்ட் டரம்ப் தெரிவித்தார்.
‘கெமராக்கள் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரவு நேர தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்க்கப்படுவீர்கள்’ எனவும் அவர் கூறினார்.
சி.என்.என். தொலைக்காட்சி பொய் செய்தி வெளியிடுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். இச்செய்தியாளர் மாநாட்டில், சி.என்.என். செய்தியாளர் ஜிம் அக்கோட்டாவுடன் டெனால்ட் ட்ரம்ப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அச் செய்தியாளர் கேள்வி கேட்பதற்கும் டொனால்ட் ட்ரம்ப் அனுமதிக்க மறுத் தார். ‘நீங்கள் போலிச் செய்திகள்’ என அவர் கூறினார்.
ரஷ்யாவும் மறுப்பு
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி மாளிகையும் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான மேற்படி செய்திகளை மறுத்துள்ளது.
இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்காவ் கூறும்போது, ‘இவை அர்த்த மற்ற சோடிக்கப்பட்ட தகவல்கள். ரஷ்யா, அமெரிக்காவுக்கு இடையிலான உறவை சீர்குலைக்கும் முயற்சியாக இத்தகைய தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன’ எனக் கூறியுள்ளார்.
ஆனால், டொனால்ட் ட்ரம்பின் பாலியல் வீடியோவை தவிர வேறு பல ஆவணங்களும் ரஷ்யாவிடம் இருக்கக்கூடும் என அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. நம்புவதாக பி.பி.சி. யின் வோஷிங்டன் செய்தியாளர் போல் வூட் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் செக்ஸ் டேப் குறித்து தெரியவந்ததாக கடந்த ஓகஸ்ட் மாதம், இரண்டாவது தகவல் மூலமொன்றினாலும் தனக்குத் தெரியவந்ததாக போல்வூட் கூறியுள்ளார்.
அத்துடன் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான ஒன்றுக்கு மேற்பட்ட செக்ஸ் டேப்கள் இருப்பதாக சி.ஐ.ஏ. வட்டாரங்கள் தனக்குத் தெரிவித்ததாகவும் போல் வூட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலில் தலையீடு செய்வதற்கு ரஷ்யா முயற்சித்திருக்கலாம் என டொனால்ட் ட்ரம்ப் முதல் தடவையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகளின் பிரதானியாக பணியாற்றவுள்ள பிரைபஸ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
Average Rating