முதல் தடவையின் போது மனைவியிடம் பேசக் கூடாத 9 விஷயங்கள்..!!

Read Time:4 Minute, 2 Second

Capture-74-350x217இங்கு முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது துணையிடம் பேசக் கூடாத 9 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், பேச்சாக இருந்தாலும் இடம் பொருள், ஏவல் பார்த்து பேச வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள். இது, வெளியுலகில் பேசும் போது மட்டுமல்ல, வீட்டில் நான்கு சுவருக்குள் பேசும் போதும் பொருந்தும். முக்கியமாக முதலிரவின் போது, முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது இது அதிகமாக பொருந்தும். கணவன் – மனைவிக்குள் ஒளிவுமறைவு இருக்க கூடாது தான். எனினும், முதலிரவின் போது இந்த 9 விஷயங்களை பற்றி அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்….

பழைய நினைவுகள்! எக்காரணம் கொண்டும் எடுத்த எடுப்பிலேயே உண்மை விளம்பி என்ற பெயரில் முதலிரவு / அல்லது முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது பழைய வரலாறுகளை பற்றி கேட்கவும் வேண்டாம், கூறவும் வேண்டாம். இது, முதல் அனுபவத்தை கெடுக்க காரணியாக அமையலாம்.

நான், தான், என்னுடைய! பேச்சை துவக்கியதில் இருந்து, முடிக்கும் வரை, நான், நான் இப்படி, நாங்க எல்லாம் அப்படி என சுயபுராணம் பேச வேண்டாம். இது நீங்கள் ஒரு சுயநலவாதி, அல்லது சுய தம்பட்டம் அடிப்பவர் போன்ற எண்ணம் பதிய செய்யும்.

குடும்ப டிராமா! எங்க குடும்பத்துக்குன்னு ஒரு இது இருக்கும். இதெல்லாம் தான் பண்ணும், இதெல்லாம் செய்யக் கூடாது என பெரிய பட்டியலை முதலிரவின் போது நீட்ட வேண்டாம்.

செக்ஸ்! முதல் முறை என்பதால் அவர்களுக்கு சற்று பயம் அல்லது பதட்டம் இருக்கலாம். அந்த தருணத்தில் உங்கள் செக்ஸ் ஆசைகளை அதிகமாக வெளிப்படுத்த வேண்டாம். அனைத்தையும் முதல் முறையே எதிர்பார்ப்பது இரண்டு தாக்கங்களை உண்டாக்கும். 1) உங்கள் மீதான நல்ல பிம்பத்தை உடைக்கும், 2) பெண்களுக்கு அதிக அச்சத்தை உண்டாக்கும்.

பணம்! பணம் அதிகம் இருக்கிறது என்ற மமதையை வெளிப்படுத்துவது அல்லது பொருளாதார கஷ்டத்தை வெளிப்படுத்துவது இரண்டுமே தவறானது. முதலிரவில் இவை இரண்டுமே எதிர்மறை தாக்கத்தை தான் உண்டாக்கும்.

உடனுக்குடன் அனைத்தும்! முதலிரவின் போது தாம்பத்தியத்தை மட்டுமின்றி வேறு விஷயங்கள் பேசுவதும் வேண்டியது தான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்தமாக, உங்கள் வாழ்க்கை வரலாற்றை முதல் தடவையின் போதே ஒப்பித்துவிட வேண்டாம்.

எதிர்மறை எண்ணங்கள்! உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணத்தை தாம்பத்தியத்தின் போது வெளிப்படுத்த வேண்டாம்.

நாம்! உங்கள் உரையாடலில் நாம் என்ற வார்த்தை தான் இருக்க வேண்டுமே தவிர, நீ, நான் என்ற பிரிவினை பேச்சு இருக்க கூடாது.

சுயமரியாதை! உங்கள் சுய மரியாதையை குறையும் வண்ணதிலோ, குறைக்கும்படியோ பேச வேண்டாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்..!!
Next post ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: சிம்பு சொன்ன யோசனை..!!