லிபியாவில் கடலில் மூழ்கிய படகு : 100 அகதிகள் பலி..!!

Read Time:1 Minute, 41 Second

201701151141341590_Libya-boat-sank-in-the-sea-100-refugees-killed_SECVPFஆசிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பலர் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். நிலப்பகுதி வழியாக செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

எனவே, தற்போது கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் சென்று நுழைவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்பவர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர்.

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் படகு ஒன்று மத்திய தரைக்கடலில் வந்து கொண்டிருந்தது. லிபியாவுக்கும், இத்தாலிக்கும் இடையே 50 கி.மீ. தூரத்தில் வந்த போது படகு கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்ததும் பிரான்ஸ் கடற்படை கப்பலும், 2 வர்த்தக கப்பல்களும், விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன.

இருந்தும் 4 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். படகில் ஏராளமானவர்கள் பயணம் செய்தனர்.

எனவே 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்கள் எந்த நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.

இதற்கிடையே நேற்று முன்தினம் மத்திய தரைக் கடலில் படகுகளில் பயணம் செய்த 550 அகதிகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவர் மீன் பிடிக்கும் அழகை பாருங்கள்..!! (கலக்கல் வீடியோ)
Next post ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா..!!