பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்..!!

Read Time:3 Minute, 45 Second

201609230748468437_Some-simple-ways-to-remove-the-scars-of-pimples_SECVPFபருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஏழே நாட்களில் மறையச் செய்யலாம். இங்கு ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

* 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 7-8 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, பின் இந்த க்ரீம்மை தடவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் விரைவில் மறையும்.

* சருமத்தில் உள்ள தழும்புகளை வைட்டமின் சி நிறைந்த பொருட்கள் எளிதில் மறையச் செய்யும். அதற்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தினமும் இரவில் படுக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் பொடியில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் மறைந்திருப்பதைக் காணலாம்.

* ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முதலில் முகத்தை ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் உலர வைத்து, பின் மீண்டும் அதன் மேல் தடவி உலர வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் புதினா பேஸ்ட்டை, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து, அதோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் இரண்டு முறை அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்! பரபரப்பு காணொளி..!!
Next post மொஸ்கோ ஹோட்­ட­லில் டொனால்ட் ட்ரம்ப் படுக்­கையில் சிறுநீர் கழித்­தாராம்; ரஷ்ய புலனாய்வாளர்களிடம் வீடியோ..!!