முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு எளிய வழி..!!

Read Time:2 Minute, 20 Second

201701121132207311_easiest-way-to-remove-dirt-in-the-face-Steam-cleaning-your_SECVPFஎந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது.

முதுமை தோற்றதை தடுக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பொலிவிழந்து முதுமை தோற்றதை ஏற்படுத்துகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, முகம் பளிச்சென்று, இளமைத் தோற்றத்தை தருகிறது.

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு இந்த முறை மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்.

ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். எனவே நேரத்தை ஒதுக்கி முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டு உறவு; கூட்டுத் தீர்மானம்; கூட்டுப் பொறுப்பு; கூட்டு உழைப்பு..!! (கட்டுரை)
Next post வீட்டில் வாலிபர்களுடன் உல்லாசம்: பொலிசார் அதிரடி..!!