3 ஆண்டுகள் தனியாகப் போராடி சாலை அமைத்த மனிதர்..!!

Read Time:2 Minute, 0 Second

201701111507423967_kerala-man-struggle-alone-for-3-years-for-set-a-road_secvpfகேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி(59). தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் வேலையை செய்துவந்த சசி, 18 வருடங்களுக்கு முன் தென்னை மரம் ஏறியபோது கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் வலது தோள்பட்டை, கால் ஆகியவற்றில் பட்ட அடி காரணமாக வேகமாக சசியால் நடக்க முடியாது. இதனால் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என மூன்று சக்கர வண்டி கேட்டு கிராம பஞ்சாயத்தில் மனு கொடுத்தார். மேலும் தனது வீட்டிற்கு அருகில் சாலை வசதி இல்லையென்பதையும் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.

வீட்டிற்கு அருகில் சாலை அமைக்க கிராம பஞ்சாயத்து முன்வராததால் தானே தனியாக சாலை அமைக்கும் முடிவிற்கு வந்த சசி, தினசரி 6 மணி நேரம் சாலை அமைக்கும் பணியில் தனியாக ஈடுபட்டார். இதன் காரணமாக 200 மீட்டர் தூரம் கொண்ட மண் சாலையொன்றை 3 வருடங்களில் சசி தனியாளாக அமைத்து விட்டார்.

இதுகுறித்து சசி கூறும்போது “இந்த வேலையால் சாலை அமைத்தது மட்டுமின்றி, எனக்குத் தேவையான பிசியோதெரபி பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டேன். இன்னும் ஒரு மாதத்தில் இந்த சாலை அமைக்கும் பணி முடிந்து விடும். ஆனால் கிராம பஞ்சாயத்தில் இருந்து எனக்கான மூன்று சக்கர வண்டி இன்னும் வந்து சேரவில்லை” என்று வருத்தம் கலந்த புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரிலீஸுக்கு முன் 85 கோடி வசூலித்த பைரவா..!!
Next post  விலகுமா கூட்டமைப்பு? (கட்டுரை)