குளிர்காலம்: சருமத்தை வறட்சியை தடுக்கும் வழிகள்..!!

Read Time:4 Minute, 17 Second

201611280726286238_winters-ways-to-prevent-skin-dryness_secvpfகுளிர்காலம் உடலை குளிர்ச்சிப்படுத்தினாலும் சருமத்தை வறட்சிக்குள்ளாக்கி விடும். முகப்பொலிவுக்கும் பங்கம் ஏற்படுத்திவிடும். முகத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் பசை தன்மைதான் சருமத்திற்கு பாதுகாப்பு கவசம். குளிர்ச்சியான காற்று வீசும்போது எண்ணெய் பசை நீங்கி சருமத்தில் வெடிப்புகள் ஏற்படத்தொடங்கி விடும். அதனால் சருமம் உலர்வடைந்து, அசவுகரியங்களை சந்திக்க நேரிடும். பெரும்பாலானவர்களுக்கு உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு வலி உண்டாகக்கூடும். ஈரப்பதத்தை தக்கவைத்தால்தான் சருமம் வறட்சிக்குள்ளாவதை தவிர்க்க முடியும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம்:

* குளிர்காலத்தில் சரும வறட்சியை போக்குவதில் எண்ணெயின் பங்களிப்பு முக்கியமானது. தினமும் எண்ணெய் தேய்த்து குளித்து வருவதன் மூலம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை சீராக வைக்கலாம்.

* குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். நிறைய பேர் சூடான நீரில் குளிக்க விரும்புவார்கள். ஆனால் சூடான நீர் சரும வறட்சியை அதிகப்படுத்தவே செய்யும். சூடு நீங்கி மிதமான பின்னரே குளியலுக்கு பயன்படுத்த வேண்டும்.

* குளிர்காலத்தில் நிறைய பேர் குடிநீர் பருகும் அளவை குறைத்துவிடுவார்கள். அது தவறான பழக்கம். தாகம் இல்லாவிட்டாலும் வழக்கமாக பருகும் தண்ணீரை பருகி விட வேண்டும். இல்லாவிட்டால் சரும வறட்சிக்கு அது காரணமாகிவிடும்.

* குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். அது சரும வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை தக்க வைக்கும். அதேவேளையில் எண்ணெய் பசை மிகுந்த மாய்சுரைசரைப் பயன்படுத்தக்கூடாது. கிரீம் அல்லது ஜெல் வகை மாய்ஸ்சுரைசர் நல்லது.

* குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் சருமம் மென்மை தன்மையை இழந்து வறட்சியின் பிடியில் சிக்கிக்கொள்ளும். ஆகவே அவ்வப்போது சருமத்தை ‘ஸ்கரப்’ செய்ய வேண்டும். அதன் மூலம் இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

* குளிர்காலத்தில் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்ய மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். வாரம் ஒருமுறையாவது தினமும் இரவில் படுக்கும் முன்பாக, ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். அது சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும். தேக ஆரோக்கியத்துக்கும் பலம் சேர்க்கும். உடலில் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்யும்.

* குளிர்காலத்தில் சாப்பிடும் உணவு விஷயத்திலும் அக்கறை கொள்ள வேண்டும். ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும். மீன் உள்ளிட்ட ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்..!!
Next post ஆலியா பட்டின் வீட்டிற்கு படையெடுக்கும் செக்ஸ் பட இயக்குனர்கள்..!!