வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 27 Second

2a8ff2a700000578-3162867-image-a-33_1437000200262கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.

Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் 2015 வரை இந்த வினோதம் தொடர்ந்துள்ளது.

இங்கு வசிக்கும் நபர்கள் தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.

அவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் கழித்து தூக்கத்தில் இருந்து விழித்த கதையும் நடந்துள்ளது.

மேலும், இவ்வாறு நீண்ட நேரம் தூங்கி எழும் அவர்களுக்கு ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வினோத நிகழ்வுகளின் காரணங்களை கண்டறிய அறிவியலாளர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர்.

பல மருத்துவர்கள் அங்கு வாழும் நபர்களின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்த நிலையில், அறிவியலாளர்கள் சுமார் 7,000 முறை அங்குள்ள மண், நீர், காற்று, என சோதித்து பார்த்துள்ளனர்.

முதலில் பலராலும் இதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அந்த கிராமவாசிகள் பெருமளவில் தொடர்ந்து தூக்க நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மண்ணிலும் நீரிலும் அதிகளவில் கன உலோகங்கள் இருந்ததால், நீரில் எண்ணற்ற வைரஸ்கள், பக்டீரியாக்காள் இருப்பது காரணமாக இருக்குமோ என்று ஆராயப்பட்டது.

அந்த பகுதியில் கதிரியக்கம் அதிகம் இருந்ததால் அது காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் இவற்றில் எதையுமே அறிவியலாளர்களால் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாததால் காரணம் பற்றிய மர்மம் விலகாமலே இருந்துள்ளது.

இந்நிலையில், அங்கு முன்பு செயல்பட்ட யுரேனியம் சுரங்கம் அருகே இருந்தது கண்டறியப்பட்டது.

முன்பு 6500 என மக்கள் தொகை கொண்டு விளங்கிய அந்த கிராமத்தில், இன்று சுமார் 700 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த பழைய யுரேனிய சுரங்கம் தான் காரணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதில் இருந்து அதிகளவில் வெளியான கார்பன் மோனாக்ஸைட் மற்றும் ஹைட்ரோ கார்பனின் அதிகரிப்பால் ஆக்ஸிஜனின் அளவு காற்றில் பெருமளவில் குறைந்துள்ளது.

இதையடுத்து அங்கு வசித்து வந்த கிராம மக்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டு அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்..!!
Next post  2017: காத்திருக்கும் கதைகள்..!! (கட்டுரை)