கொழும்பில் விமான நிலையத்தை தகர்க்க சதி: பெண்கள் உள்பட 16 பேர் கைது

Read Time:2 Minute, 5 Second

Colombo.Slk.1.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலை யில் கொழும்பு நகருக்குள் விடுதலைப்புலிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்பதால் ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு நகரில் ராணுவம் வீடு வீடாக சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள வீடுகளில் ராணுவத்தினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஏராளமான கண்ணி வெடிகள், நவீன துப்பாக்கிகள் வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கொழும்பு விமான நிலையத்தை தகர்க்கவும் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தவும் இவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விடுதலைப்புலிகள் தான் இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை பதுக்கியதாக ராணுவம் கூறுகிறது.

போர் காரணமாக முக்கிய தமிழர் பகுதிகளில் 3 லட்சம் தமிழர்கள் பட்டினியால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுதற்காக செஞ்சிலுவை சங்கத்தினர் 2 கப்பல்களில் உணவுப் பொருள்களை கொண்டு வந்து இறக்குகிறது. யாழ்ப்பாணம் துண்டிக்கப்பட்டதால் சிக்கி உள்ள வெளிநாட்டவர்களையும் இந்த கப்பல் ஏற்றிக்கொண்டு திரும்பிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கனடாவில் புலிகளின் ஆயுதக்கொள்வனவு மையம் -மேலுமிருவர் கனடாவில் கைது
Next post விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்