உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பழங்கள்..!!

Read Time:3 Minute, 43 Second

honey-recipes-that-help-in-caining-wight-615x3951-585x376இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க எவ்வளவு பேர் முயற்சிக்கின்றனரோ, அதற்கு இணையாக உடல் எடையை அதிகரிக்க முயற்சிப்போரும் உள்ளனர். உடல் எடையை குறைக்க எப்படி டயட், உடற்பயிற்சி போன்றவை உள்ளதோ, அதேப்போல் உடல் எடையை அதிகரிக்கவும் வழி உள்ளது.

அதற்காக பலர் உடல் எடையை அதிகரிக்கும் மருந்துகள் மற்றும் இதர பொருட்களை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் இதனால் தற்காலிகமாக உடல் எடை அதிகரிக்குமே தவிர, நிரந்தரமாக அல்ல. அதுமட்டுமின்றி, இந்த பொருட்கள் அனைத்தும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆகவே உடல் எடையை அதிகரிக்க குறுக்கு வழியை நாடாமல், இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தால், உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும். அதற்கு உடல் எடையை அதிகரிக்கும் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும்.

இங்கு உடல் எடையை அதிகரிக்கும் அற்புத பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

வாழைப்பழம்
வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்களில் முதன்மையானது. யாருக்கு உடல் எடையை அதிகரிக்க விருப்பமோ, அவர்கள் தினமும் வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான கலோரிகளால் உடல் எடை அதிகரிக்கும். மேலும் வாழைப்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
உலர் பழங்களான உலர் திராட்சை, பாதாம், முந்திரி போன்றவற்றை உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாப்பிட வேண்டும். ஏனெனில் இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.

மாம்பழம்
பழங்களின் அரசனான மாம்பழத்தை அதிகம் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளால் உடல் எடை அதிகரிக்கும். எனவே நல்ல இயற்கை உரங்கள் பயன்படுத்தி விளைந்த மாம்பழங்களை தேர்ந்தெடுத்து வாங்கி சாப்பிடுங்கள்.

அத்திப்பழம்
அத்திப்பழத்தில் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

அவகேடோ
அவகேடோவில் 400 கலோரிகள் உள்ளது. மேலும் கொழுப்புக்களும் அதிகம் உள்ளது. உங்களுக்கு இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை மில்க் ஷேக் செய்து குடியுங்கள். நிச்சயம் அவகேடோ மில்க் ஷேக் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும்.

திராட்சை
தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும். திராட்சையில் 104 கலோரிகள் உள்ளது. ஆகவே இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடல் எடையை அதிகரிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவத்திற்கு பின் பெண்களால் ஏன் தாம்பத்தியத்தில் ஈடுபட முடிவதில்லை..!!
Next post இராணுவப்படை தாக்குதல் : 32 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி..!!