1 மணிநேரத்தில் 22½ கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 105 வயது முதியவர்..!!

Read Time:1 Minute, 26 Second

201701051035020338_105-year-old-frenchman-sets-cycling-record_secvpfசாதனைக்கு வயது தடை இல்லை’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் ராபர்ட் மார்சண்ட். இவர் பிரான்சை சேர்ந்தவர். இவர் பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதான ஓடு தளத்தில் சைக்கிள் ஓட்டினார்.

1 மணி நேரத்தில் இவர் 22.5 கி.மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இவர் தனது 102 வயது வயதில் 26.9. கி.மீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டியுள்ளார். 1911-ம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார்.

தனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். 2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். அதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பற்களின் மஞ்சள் கரையை போக்கும் எளிய முறை..!!
Next post ‘பைரவா’ படத்தில் விஜய் காட்சிகள் குறைப்பு..!!