சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகரில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி..!!

Read Time:1 Minute, 40 Second

201701051946353135_syrian-car-bomb-kills-9-in-government-held-town_secvpfசிரியாவில் கடற்கரையை ஒட்டிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகர் ஒன்றில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு நடைபெற்றுள்ள முதல் தாக்குதல் இது ஆகும்.

லடகியா மாகாணத்தில் உள்ள ஜப்லே பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிபர் ஆசாத் குடும்பத்தினரும் இதேபகுதியில் தான் வசித்து வருகின்றனர்.

இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில் கடைகள் மற்றும் கார்கள் சேதம் அடைந்தது தெரியவந்தது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக இதே பகுதியில் கடந்த மே மாதம் பஸ் நிலையம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 120 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களிடயே தான் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பதால் ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post  ‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? (கட்டுரை)
Next post இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சிக்கினார்..!!