பற்களின் மஞ்சள் கரையை போக்கும் எளிய முறை..!!

Read Time:2 Minute, 40 Second

3cf88abd09dfaee9a24a8a640a8e2d29_xlபலரும் தினம் தினம் எதிர்கொள்ளும் சங்கடமான விஷயம் இது. நன்றாக பல் துலக்கினாலும் பற்களில் உள்ள மஞ்சள் கரை போகாது. குறிப்பாக உட்புறம் உள்ள மஞ்சள் கரையை போக்க மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும்.

ஆனால், நம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எளிதாக பற்களில் படியும் மஞ்சள் கரையை போக்க முடியும்.

தேவையான பொருட்கள்:

பேக்கிங் சோடா, பிரஷ், ஹைடிரஜன் பெராக்சைடு, உப்பு தண்ணீர், டென்டல் பிக், ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ்.

* முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங்

சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து கலந்துக்கவும். பின் பிரஷை தண்ணீரில் நனைத்து, பற்களில் மெல்ல தேய்த்துக்கொடுக்கவும். துப்புங்கள். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.

* ஹைடிரஜன் பெராக்சைடு

உடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் வாய் கொப்பளிக்கவும். பின் குளிர்ந்து நீரில் மீண்டும் ஒரு முறை வாய் கொப்பளிக்கவும்.

பின் டென்டல் பிக்கை உபயோகித்து மஞ்சள் கரை உள்ள இடங்களில் தேய்க்கவும். அப்போது ஈறுகளில் படாமல் பார்த்துக் கொள்ளுவும். இல்லை என்றால் ஈறுகள் சேதமடையவோ, எரிச்சல் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது.

பின் மவுத்வாஷ் பயன்படுத்தி இரண்டு நாளுக்கு ஒருமுறை வாய் கொப்பளிக்க வேண்டும். இதை செய்தாலே பற்களில் உள்ள மஞ்சள் கரையை சுலபமாக போக்கிவிடலாம்.

ஷிட்ரிக் பழங்கள்:

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற ஷிட்ரிக் அமிலம் நிறைந்துள்ள பழங்களின் தோல்களும் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரைகளை போக்க உதவுகிறது.

தக்காளி, ஸ்டிராபெரி:

தக்காளி, ஸ்டிராபெரியில் ‘விடமின் -சி’ இருக்கின்றன. இது பற்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் கரை உள்ள இடங்களில் இந்த பழங்களை தேய்த்தால், கடினமாக இருக்கும் கரை நீங்குவதற்கு ஏற்ப லேசா மாறிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீசை திசை திருப்ப கணவரின் உடலை வெளியில் வீசினோம்: கைதான மனைவி வாக்குமூலம்..!!
Next post 1 மணிநேரத்தில் 22½ கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 105 வயது முதியவர்..!!